samedi 29 juin 2013

வேல்விழியாள்




வேல்விழியாள்

வேர்வையைச் சிந்தி உழைக்கும் போது - வண்ண
வேல்விழி பார்த்தால் துயர்தான் ஏது?
பார்வையால் மயக்கம் கொடுக்கும் மாது - இளம்
பாவைபோல் அழகோ யார்மண் மீது?

பூவுடன் சேரும் நாரும் மணக்கும் - உயர்
பொன்னுடன் சேரும் பொருளும் சிறக்கும்!
பாவினில் சேரும் சொல்லும் இனிக்கும் - வாழ்வில்
பற்பல நன்மை அவளால் கிடைக்கும்!

கண்களைக் கவரும் காதல் மதியாம் - என்
கருத்தினைக் கவரும் கவிதைச் சுவையாம்!
பெண்ணினம் வியக்கும் மின்னற் கொடியாம் - நற்
பெருமையைப் படைக்கும் அன்பின் வடிவாம்!

18.07.1982

9 commentaires:

  1. பெண்ணினம் வியக்கும் மின்னற் கொடியாம் - நற்
    பெருமையைப் படைக்கும் அன்பின் வடிவாம்!///அப்படித்தான் சொல்லவேண்டும் அடிக்கடி சிரிக்க வேண்டும் .இப்படி செய்தால்தான் இளமையும் காக்க முடியுமா?

    RépondreSupprimer
  2. கவிஞன் உங்கள் கவிகளே காட்டும்
    அறிஞன் யாரென அவைகூறும்! கலைஞன்
    கம்பன் காவியம் காக்கும்நிதியே! நீரெமக்கு
    நம்பன் நல்கிய நல் வரமே!

    ஐயா வணக்கம்!
    உங்கள் கவிகள் தரும் அழகில் எனைமறந்து
    எழுதத் தோன்றியதை இங்கெழுதிவிடுகிறேன்.
    தவறுகள் மிகவுண்டு. திருத்தங்களை வேண்டுகிறேன்.

    என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும்!
    மிக்க நன்றி ஐயா!

    த ம.4

    RépondreSupprimer
  3. பாவினில் சேரும் சொல்லும் இனிக்கும் - வாழ்வில்
    பற்பல நன்மை அவளால் கிடைக்கும்!

    வெகு அழகாக சொன்னீர்கள் ஐயா. மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்.

    RépondreSupprimer
  4. அழகு! அருமை! வாழ்த்துக்கள் கவிஞரே!

    RépondreSupprimer
  5. அருமையான படைப்பு! சந்த நயம் சிறப்பு! நன்றி!

    RépondreSupprimer
  6. பூவுடன் சேரும் நாரும் மணக்கும் - உயர்
    பொன்னுடன் சேரும் பொருளும் சிறக்கும்!
    பாவினில் சேரும் சொல்லும் இனிக்கும் - வாழ்வில்
    பற்பல நன்மை அவளால் கிடைக்கும்!//நல்ல மனைவி அமைந்தால் வாழ்வு சிறக்கும்,கவிதை நன்றாக இருக்கின்றது வாழ்த்துக்கள் ஐயா

    RépondreSupprimer
  7. பாவினில் சேரும் சொல்லும் இனிக்கும் - வாழ்வில்
    பற்பல நன்மை அவளால் கிடைக்கும்!

    கவியில் இணைந்த சொற்களும் இனிக்கும் ..!

    RépondreSupprimer
  8. ":பெண்ணினம் வியக்கும் மின்னற் கொடியாம்.." அருமை

    RépondreSupprimer