துணிந்து நில்
விதிதனை மதியால் வெல்லு - உலகில்
வீரனாய்த் துணிந்து நில்லு!
சதிதனை எதிர்த்துக் கொல்லு - என்றும்
சத்தியம் காக்கும் சொல்லு!
சாதியின் தாழ்வைத் தள்ளு - எங்கும்
சமத்துவம் கண்டு துள்ளு!
நீதியாம் தராசின் முள்ளு - கூறும்
நிலைமையை மனத்தில் கொள்ளு!
செந்தமிழ்த் தாயைப் போற்று - என்றும்
செழிப்புடன் கடமை ஆற்று!
சிந்தையில் மடமை அகற்று - உளம்
சீர்படும் கவிகள் இயற்று!
11.01.1980
அப்படிச் சொல்லுங்க ஐயா...
RépondreSupprimerநன்றி... வாழ்த்துக்கள்...
மதியும் வீரமும் உறுதியும் இருந்திட்டால்
RépondreSupprimerவிதியும் வீழ்ந்திடாதோ விரைந்து...
அழகான அருமையான கவி ஐயா!
பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!.
த ம. 3
சிந்தையின் மடமை அகற்று
RépondreSupprimerஅருமை அய்யா
துணிவு கவிதை மிகவும் அருமை ஐயா
RépondreSupprimer