வளமார் தமிழைப் போற்றுகவே
நல்ல தமிழைக் கற்பதுவே
நம்மின் பிள்ளைக்(கு) அழகாகும்!
அல்லல் அளிக்கும் அயல்மொழியை
அகற்றி உயர்தல் அறிவாகும்!
சொல்ல இனிக்கும் நன்னெறியைச்
சூடும் வாழ்வில் புகழ்மேவும்!
வல்ல திறனை அருள்கின்ற
வளமார் தமிழைப் போற்றுகவே!
தெளிதமிழ் இதழ் 13-02-1999
தமிழைப் போற்றுவோம் அய்யா
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
தமிழ்வழிக் கல்வியைத் தந்துவந்தால் என்றும்
அமிழ்தமென ஊறும் அகம்!
வாகை சூடும்
RépondreSupprimerவாழ்வில் புகழ்மேவும்!
வல்ல திறனை அருள்கின்ற
வளமார் தமிழைப் போற்றுகவே
Supprimerவணக்கம்!
வளமார் தமிழை உளமாரக் கற்றால்
நிலைமாறி ஓங்கும் நிலம்!
இனிதாய்ச் சொன்ன அறிவுரைகள்
RépondreSupprimerஇளையோர் தமக்கு உணர்வுரைகள்
நன்றாய் மனதில் பதித்திட்டால்
நலமே உயர்வோம் உலகினிலே!.
த ம.2
Supprimerவணக்கம்!
நலமே விளைய நறுந்தமிழ் காப்போம்!
நிலமே மகிழும் நிலைத்து!
சிறப்பு...
RépondreSupprimerவாழ்த்துக்கள் ஐயா...
Supprimerவணக்கம்!
விழிப்புற வேண்டும்! வியன்தமிழ்க் கல்வி
செழிப்புற வேண்டும் சிறந்து!
RépondreSupprimerசெம்மொழி என்னும் சிறப்பறியார்! இவ்வுலகில்
தம்மொழி காவாத் தமிழா்கள்! - ஆம்!ஆம்!ஆம்
அன்னார் அகத்துள் அயல்மொழியே முன்னிற்கும்!
என்னா இழிநிலை? எண்ணு!
Supprimerவணக்கம்!
இழிநிலை எண்ணார்! இனியதமிழ் காவாப்
பழிநிலை எண்ணார்! பார்க்கும் - விழிநிலை
கெட்டு வழிப்பாடா? கீழ்நிலை அத்தனையும்
விட்டு விலகல் விடிவு!
அல்லல் அளிக்கும் அயல்மொழியை
RépondreSupprimerஅகற்றி உயர்தல் அறிவாகும்!
தமிழ் மொழியை போற்றுவோம் அதே சமயம் அயல் மொழி அல்லல் அளிக்கும் என்ற வரி எனக்கு புரியவில்லை அய்யா,,அன்புடன் அப்துல் தயுப்
Supprimerவணக்கம்!
கன்னல் தமிழில் கலப்புறும் சொற்களால்
இன்னல் அடைந்தே இயல்பழியும்! - இன்பத்
தனித்தமிழ் வேண்டும்! தவத்தமிழ் வேண்டும்!
கனித்தமிழ் நெஞ்சன் கனவு!
RépondreSupprimerஇனிய தமிழ் உறவுகளே வணக்கம்!
கருத்தளித்த கைகளுக்கு என்னன்றி! கொண்டேன்
விருதளித்த மேன்மை விருந்து!
RépondreSupprimerஇனிய தமிழ் உறவுகளே வணக்கம்!
வந்தவா் வாழ வழிபல செய்துவக்கும்
செந்தமிழ் நாடே! சிறார்தம் - சிந்தை
அமிழ்துாற! மின்னும் அறிவூற! அன்னைத்
தமிழ்வழிக் கல்வியைத் தா!
ஐயா வணக்கம்...
RépondreSupprimerஎங்களால் தரப்படும் கருத்துப்பகிர்விற்கு நீங்கள் தரும் பதில் கவிக்கருத்து ஒவ்வொன்றுமே அத்தனை சிறப்பாக இருக்கிறது.
இதனைப்படித்து ரசிபதற்கென்றே மீண்டும்மீண்டும் இங்கு வந்து நீங்கள் பதில் கவி எழுதிவிட்டீர்களாவெனப் பார்த்து ரசித்து மகிழ்கின்றேன்.
பதிவுகளும் அவற்றுக்கு தரும் பதில் கவிப்பகிர்வும் மிகவும் சிறப்புவாய்ந்தவை.
மிக்க மகிழ்ச்சியும் என் நன்றிகளும் உங்களுக்கு!
நல்ல தமிழை நம் பிள்ளைக்கு ஊட்டி
RépondreSupprimerஎன்றும் தமிழை வாழ வைப்போம்!
நாம் தமிழனென்று நடைபோட வைத்த
நல்ல தமிழைப் போற்றுவோம்!
தமிழைப் போற்றுவோம், மிகவும் அழகான படைப்ப்பு!!!
RépondreSupprimer