கேள்விக் குறியாய்
கெஞ்சிக் கெஞ்சிப் போகாதே!
கேள்விக் குறியாய் ஆகாதே!
அஞ்சி அஞ்சிச் சாகாதே!
அடிமைப் பட்டுப் போகதே!
விதியை எண்ணி வாழாதே!
வெம்பி வெம்பி வீழாதே!
மதியைக் கொன்று தாழாதே!
மதிப்பை இழந்தே ஆழாதே!
அன்பால் எதையும் வென்றிடுவாய்!
அறிவால் இடரைக் கொன்றிடுவாய்!
பண்பால் உலகில் நின்றிடுவாய்!
பாரோர் புகழச் சென்றிடுவாய்!
5.10.1985
கருத்துள்ள வரிகள் பல... வாழ்த்துக்கள் ஐயா...
RépondreSupprimerஅன்பால் எதையும் வென்றிடுவாய்...!
Supprimerவணக்கம்!
கருத்துள்ள பாட்டென்று காட்டும் தனபால்
விருப்புற்றுத் தந்தார் விடை!
அன்பால் எதையும் வென்றிடுவாய்!
RépondreSupprimerஅறிவால் இடரைக் கொன்றிடுவாய்!
பண்பால் உலகில் நின்றிடுவாய்!
பாரோர் புகழச் சென்றிடுவாய்!//
எளிய வார்த்தைகளுடன்
ஆழமான கருத்துடைய கவிதை
அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
Supprimerவணக்கம்!
அருமை! மிகஅருமை! ஆழ்ந்த கருத்துப்
பெருமை! மிகப்பெருமை! பேறு!
tha.ma 2
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
வாக்களித்தீா்! வல்ல மணமளித்தீா்! நாள்தோறும்
ஊக்கம் அளித்தீா் உவந்து!
மிகமிக அருமை. மனதில் பதித்தால் மாண்பு பெறலாம்.
RépondreSupprimerஅன்பே அனைத்தும். மிக்க நன்றி ஐயா!
த ம 4
Supprimerவணக்கம்!
அன்பின் பிடியில் அகிலம் அகப்படுமே!
பண்பின் உயா்வைப் படைத்து!
எளிய வார்த்தைகள் .
RépondreSupprimerவலிய கருத்துக்கள்.
நன்றி அய்யா.
ஒரு சந்தேகம் அய்யா.
"மதிப்பை இழந்தே ஆழாதே!" இந்த வரியில் ஆழாதே என்பது அழாதே என்பதன் அளபெடையா அல்லாது வேறு பொருளா?
விளக்க வேண்டுகிறேன்.
Supprimerவணக்கம்!
துன்பத்தில் ஆழ்தாலும் உன்றன் துணிவிழந்து
என்றென்றும் ஆழாதே இங்கு!
ஆழ்தல் - ஆழாதே
வீழ்தல் - வீழாதே
தாழ்தல் - தாழாதே
அர்த்தம் பொதிந்த கவிதை. ரசித்தேன்......
RépondreSupprimer