கலைமகளே
எடுப்பு
காவிரிக் கரையில் காத்திருந்தேன் - என்
காதலி யைஎதிர் பார்த்திருந்தேன்!
(காவிரி)
தொடுப்பு
பூவிரிந் தாடப் பூத்திருந்தேன் - மலர்
பூங்கொடி சூடக் கோர்த்திருந்தேன்!
(காவிரி)
முடிப்புகள்
முத்தாம் நிலவு வந்ததடி - காதல்
மோகம் மனதில் உந்துதடி!
அத்தான் ஆசை பெருகுதடி - கலை
அழகைக் காண உருகுதடி!
(காவிரி)
இன்றும் என்றும் இளையவளே - இங்கு
என்னைக் கவர்ந்த கலைமகளே!
என்றும் எனக்கே உரியவளே - பே
ரின்பப் பொழுதில் பெரியவளே!
(காவிரி)
22.05.1980
கலைமகள் பாடலுக்குப் பாராட்டுக்கள்.
RépondreSupprimerமனம் மகிழ வைத்த கவிதை வாழ்த்துக்கள் ஐயா !
RépondreSupprimerஎடுப்பு... தொடுப்பு... முடிப்பு... அனைத்தும் சிறப்பு...
RépondreSupprimerவாழ்த்துக்கள் ஐயா...
கொத்தாய்த் தமிழில் கோர்தெடுத்து தந்த
RépondreSupprimerமுத்தாம் கவியை சேர்த்துவைத்தேன் எங்கள்
சொத்தாம் உங்களை தமிழுள்ளவரை நல்ல
வித்தாய் எண்ணி மொழி வளர்த்திடுவோம்.
அற்புதம் ஐயா!
இத்தனை இலகு நடையில்
அழகு கவிதை!
மனம் கவிதையின் சந்தத்தில் சிக்கி
மெட்டுப்போட்டுப் பாட எண்ணுகிறது!
என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!...
த ம.4
வணக்கம்.
RépondreSupprimer1980 லிருந்து எதிர் பார்க்கிறீர்களா...?
கிடைத்து விட்டாளா?
வாழ்த்துக்கள் கவிஞர்.
த.ம.6
கலைமகளைப் போற்றிடுவோம்.
RépondreSupprimerஐயா வணக்கம்!
RépondreSupprimerவந்ததடி, உந்துதடி, பெருதடி, உருகுதடி
எத்தனை அடிகள்.
காதற் சுவை சொட்டச்சொட்டப் புனைந்த கவிதை.
இளையவள் அவளே சமயத்தில் பெரியவள்
ம்.. ரசிக்கவைக்கும் வரிகள்.
வாழ்த்துக்கள் ஐயா!
கவிங்கருக்கு காலம் நேரமெல்லாம் கிடையாது .நினைத்தேன் முடித்தேன் என்றல்லவா இருக்கும் அதுபோலவே நம்மவரும் இன்னும் ஏக்கத்தோடு கவிதையால் தாக்கி வருகிறார்.வாழ்த்துக்கள் இப்போதும் இனிமேலும்....
RépondreSupprimerகலைமகளைப் போற்றிடுவோம்
RépondreSupprimerவணக்கம்...
RépondreSupprimerஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...
வணக்கம் ஐயா!
RépondreSupprimerஇன்று உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளனர்.
மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!
நீங்கள் என் தளத்திற்கு வந்திருந்தாலும் நான் இதுவரை வந்தது இல்லை! வந்து பூரித்தேன் இன்று வலைச்சரம் மூலமாய்! தொடர்கிறேன்! நன்றி!
RépondreSupprimer
RépondreSupprimerவணக்கம்!
கலைமகள் மின்னும் கனிச்சுவை பாட்டுக்கு
இலைநிகா் என்பேன் இசைத்து! - மலைத்தேன்
தலைமகன் நீயெனத் தண்கவி தந்தாய்!
அலைமகன் ஈந்த அருள்!