தனிநாயகம்
எங்கள் தமிழ் நாயகமே!
மெல்லஇனி
உலகமெலாம் தமிழைக் கற்கும்!
மேனாட்டார் நம்மொழியை ஆய்வு செய்வார்!
கொல்லஇனி
வருவாரோ பகைவர் கூட்டம்!
கொடும்புலிபோல் தமிழ்மறவர் எழுச்சி கொள்வார்!
நல்லதனி
நாயகமே! உன்றன் உள்ளம்
நறுந்தமிழின் தாயகமே! உணர்வை ஊட்டி
வல்லபணி
செய்தனையே! புகழை ஏந்தும்
வளரணி கண்டனையே! வணங்கு கின்றேன்
உலகத்
தமிழ்த் தந்தை
தனிநாயக
அடிகளார்!
இன்றமிழ்
நாயகரை! ஈடில் புகழுடைய
பொன்றமிழ்
நாயகரைப் போற்றுகிறேன்! - மென்றமிழ்ச்
சீர்பரவச்
செய்தவரைச் செந்தமிழர் செம்மையினைப்
பார்பரவச்
செய்தவரைப் பாடு!
உலகத்
தமிழ்த்தந்தை! ஓங்குபுகழ் வாணர்!
குலவும்
குறள்நெறி யாளர்! அடிகளார்!
அன்னை
அறமுரைத்தார்! அன்பின் வழிபடைத்தார்!
முன்னை
மொழியை மொழிந்து!
16.0.2013
16.0.2013
தனி நாயக அடிகளாரின் ஈடில்லாத் தமிழ்த் தொண்டிற்குத் தலை வணங்குவோம்
RépondreSupprimerசிறப்பித்த வரிகள் அருமை ஐயா... வாழ்த்துக்கள்... நன்றி...
RépondreSupprimerஉலகத் தமிழ்த்தந்தை! ஓங்குபுகழ் வாணர்!
RépondreSupprimerகுலவும் குறள்நெறி யாளர்! அடிகளார்!
அன்னை அறமுரைத்தார்! அன்பின் வழிபடைத்தார்!
முன்னை மொழியை மொழிந்து!
தமிழ் போற்றும் அறிஞர் அறிமுகத்திற்கு நன்றிகள்..
எப்போதும் போற்றுவோம்
RépondreSupprimerஇப்போது நன்றி சொல்வோம்
எங்கள் மண்ணின் எழில் மைந்தன்!
RépondreSupprimerதிங்கள் ஒளியாய் திகழ்ந்தவன்! பொங்குதமிழை
மங்காமல் காத்திட்ட மாண்புமிகு தமிழன்அவனை
இங்கு வணங்குகிறேன் இணந்து.!
த ம.5
அருமையான சிறப்பான வரிகள் தமிழ் போற்றும் நல்லுலகிற்கு
RépondreSupprimerகிடைத்த முத்து தனிநாயக அடிகளாரின் புகழேந்தி வந்த நற்
கவிதைக்கு வாழ்த்துக்கள் ஐயா !
வணக்கம், அழகான சிறப்பான வரிகளில் தனிநாயக அடிகளாரை வாழ்த்தியுல்லீர்கள் அய்யா... அருமை, சிறப்பு...
RépondreSupprimerஇத்தனை தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத்து தனிநாயக அடிகளாரை அவரது தமிழ்த்தொண்டைப் பற்றி அறிந்திருப்பதை பார்க்கும் பொது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஈழத்தமிழர்களின் தமிழ்த் தொண்டை பல தமிழ்நாட்டவர்கள் அறியாதிருப்பதை நான் பலமுறை அவதானித்திருக்கிறேன். அன்னாரின் சிலையை மதுரையில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் பொது திருமதி இந்திரா காந்தி திறந்து வைத்ததாக என்னுடைய அம்மம்மா(பாட்டி) ஒருமுறை கூறினார், நான் மதுரைக்குச் சென்றிருந்த போது பல ஆட்டோக்காரர்களிடம் அந்த இடத்தையும் சிலையும் பற்றிக் கேட்டேன், யாருக்கும் தெரியவில்லை, இங்கு யாருக்காவது எங்கிருக்கிறது என்று தெரிந்தால் தயவு செய்து கூறவும்.
RépondreSupprimer