vendredi 7 juin 2013

வைத்தியம் சொல்லடி




வைத்தியம் சொல்லடி

பைத்தியம் நீங்கிட வைத்தியம் சொல்லடி - அந்தப்
பாவலன் மேல்மனம் வைத்துள காதலாம்
                                             (பைத்தியம்)

கண்ணனைப் போலவே கண்கவர் வண்ணனாம் -உயர்
கம்பனைப் போலவே காவிய மன்னனாம்
என்னுளம் போலவே என்றுமென் அன்பனாம் - அவன்
இன்றமிழ் போலவே ஈடிலா இன்பமாம்
                                             (வைத்தியம்)

ராமனை மிஞ்சிடும் பேரெழில் உற்றவன் - எழில்
ராதையைக் கொஞ்சுடும் மந்திரம் கற்றவன்
காமனை விஞ்சிடும் காதலைத் தந்தவன் - அந்தக்
கர்ணனைப் போல்கொடை காத்திட வந்தவன்
                                                     (வைத்தியம்)

        20.06.1986

4 commentaires:

  1. மிகவும் ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  2. பைத்தியம் கொண்டேன் கவிகற்கவே மொய்த்திடும்
    தேனியாக கவிதரும் தேன்சுவை உன்றனுக்கு
    ஞானியின்பாரி தந்தனளோ கொடை!...

    ஐயா!.. பதினேழு வருடத்திற்கு முன்னைய கவிதையோ இது!...
    தெவிட்டாத தேன் சுவை. அன்றே இப்படி எழுதியுள்ளீர்களே...
    மெட்டுப்போட்டு பாடத்தோன்றும் அடிகள். எதுகை, மோனை.
    அற்புதம். மிகவே ரசித்தேன்.

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துகளும் ஐயா!...

    த ம. 3

    RépondreSupprimer
  3. அழக தமிழ் மனம் கொஞ்சும் கவி ஐயா

    RépondreSupprimer