samedi 15 juillet 2023

பாவலர் கீத்தா பரமானந்தன்

 

பாவலர் பயிலரங்க உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!


பாவலர் பயிலரங்கம் நடத்தும் விருத்தமாயிரம் எழுதும் கவிவளப் பயிற்சியில் ஐந்நுாறு விருத்தங்கள் பாடித் தொடர்கின்ற திருமதி கீத்தா பரமானந்தன் அவர்களுக்குப் பாவலர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கிறோம்.


பாவலர் கீத்தா பரமானந் தர்,வண்ணப்

பூவளப் பாக்கள் புனைந்திட்டார்! - மாவளங்

காணவே பட்டம் கனிந்தளித்தேன்! எந்நாளும்

பூணவே வேண்டும் புகழ்


பாவலர் பட்டம் பெற்ற திருமதி கீத்தா பரமானந்தன் அவர்களுக்குப் பாவலர் பயிலரங்க உறவுகள் விருத்தப்பாவில் ஒரு பக்க வாழ்த்து கவிதை  பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.


திருவள்ளுவர் ஆண்டு 2054/இரட்டை[ஆனி] 29

14.07.2023


பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம் பிரான்சு

Aucun commentaire:

Enregistrer un commentaire