samedi 15 juillet 2023

பாவலர் வெற்றிமகன்

 

பாவலர் பயிலரங்க உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

பாவலர் பயிலரங்கம் நடத்தும் விருத்தமாயிரம் எழுதும் கவிவளப் பயிற்சியில் ஐந்நுாறு விருத்தங்கள் பாடித் தொடர்கின்ற திருமிகு வெற்றிமகன் அவர்களுக்குப் பாவலர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கிறோம்.

வெல்லும் தமிழ்ப்பற்று வெற்றிமகன் பாட்டரங்கில்

சொல்லுங் கவிகள் சுவையூறும்! - செல்லும்

இடம்போற்றப் பாவலராய் ஏத்துகிறேன்! வாழ்க

புடம்போட்ட பொன்போல் பொலிந்து!

பாவலர் பட்டம் பெற்ற திருமிகு வெற்றிமகன் அவர்களுக்குப் பாவலர் பயிலரங்க உறவுகள் விருத்தப்பாவில் ஒரு பக்க வாழ்த்து கவிதை  பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

திருவள்ளுவர் ஆண்டு 2054/இரட்டை[ஆனி] 29

14.07.2023

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம் பிரான்சு

 

 

Aucun commentaire:

Enregistrer un commentaire