samedi 15 juillet 2023

பாவலர் கோவிந்தம்மாள் இரத்தினம்

 

பாவலர் பயிலரங்க உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

பாவலர் பயிலரங்கம் நடத்தும் விருத்தமாயிரம் எழுதும் கவிவளப் பயிற்சியில் ஐந்நுாறு விருத்தங்கள் பாடித் தொடர்கின்ற திருமிகு கோவிந்தம்மாள் இரத்தினம் அவர்களுக்குப் பாவலர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கிறோம்.

கோலப் புலமை கொழித்த..கோ விந்தம்மாள்

காலம் புகழக் கவிசெய்தார்! - ஞாலத்தின்

பாட்டரசர் பாவலர் பட்டம் தருகின்றேன்

நாட்டரசர் போற்றவே நன்கு!

பாவலர் பட்டம் பெற்ற திருமிகு கோவிந்தம்மாள் இரத்தினம் அவர்களுக்குப் பாவலர் பயிலரங்க உறவுகள் விருத்தப்பாவில் ஒரு பக்க வாழ்த்து கவிதை  பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

திருவள்ளுவர் ஆண்டு 2054/இரட்டை[ஆனி] 29

14.07.2023

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம் பிரான்சு

1 commentaire: