dimanche 2 janvier 2022

புத்தாண்டு வாழ்த்து

 

வணக்கம்!

 

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

கன்னல் கவிபாடிக் காலங் கமழுகவே!   

இன்பம் நிலைத்தே இயங்குகவே! - அன்பொளி

எங்கும் பரவுகவே! இந்தநற் புத்தாண்டில்

தங்கும் நலங்கள் தழைத்து!

 

உலகம் உறவால் ஒளிரட்டும்!  தொண்டாம்

மலர்கள் மணக்கட்டும்! வாய்மை - நிலைத்துக்

கொழிக்கட்டும்! நல்வாழ்த்துக் கூறுகிறேன்! என்றும்

செழிக்கட்டும் நல்லருள் சேர்ந்து!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம்  பிரான்சு

01.01.2022

Aucun commentaire:

Enregistrer un commentaire