mercredi 19 août 2015

பதினான்கு மண்டிலம்



என்னவனே... தென்னவனே...
பதினான்கு மண்டிலம்

1.
என்னவனே! இன்னகனே! மன்னவனே! என்மனத்து
நின்றவனே! என்னழகு தின்றவனே! - வென்றவனே! 
பொன்னவனே! மென்னகனே! மின்னகனே! வன்னகனே!
தென்னவனே இன்பருள் இன்று!

2.
இன்னகனே! மன்னவனே! என்மனத்து நின்றவனே!
என்னழகு தின்றவனே! வென்றவனே! - பொன்னவனே!
மென்னகனே! மின்னகனே! வன்னகனே! தென்னவனே
இன்பருள்இன்(று) என்னவ னே!

3.
மன்னவனே! என்மனத்து நின்றவனே! என்னழகு
தின்றவனே! வென்றவனே! பொன்னவனே! - மென்னகனே!
மின்னகனே! வன்னகனே! தென்னவனே இன்பருள்இன்(று)
என்னவனே! இன்னக னே!

4.
என்மனத்து நின்றவனே! என்னழகு தின்றவனே!
வென்றவனே! பொன்னவனே! மென்;னகனே! - மின்னகனே!
வன்னகனே! தென்னவனே இன்பருள்இன்(று) என்னவனே!
இன்னகனே! மன்னவ னே!

5.
நின்றவனே! என்னழகு தின்றவனே! வென்றவனே!
பொன்னவனே! மென்;னகனே! மின்னகனே! - வன்னகனே!
தென்னவனே இன்பருள்இன்(று) என்னவனே! இன்னகனே!
மன்னவ னே!என் மனத்து!

6.
என்னழகு தின்றவனே! வென்றவனே! பொன்னவனே!
மென்னகனே! மின்னகனே! வன்னகனே! - தென்னவனே இன்பருள்இன்(று) என்னவனே! இன்னகனே! மன்னவனே!
என்மனத்து நின்றவ னே!

7.
தின்றவனே! வென்றவனே! பொன்னவனே! மென்னகனே!
மின்னகனே! வன்னகனே! தென்னவனே - இன்பருள்இன்(று) என்னவனே! இன்னகனே! மன்னவனே! என்மனத்து
நின்றவ னே!என் னழகு!

8.
வென்றவனே! பொன்னவனே! மென்;னகனே! மின்னகனே!
வன்னகனே! தென்னவனே இன்பருள்இன்(று) - என்னவனே!
இன்னகனே! மன்னவனே! என்மனத்து நின்றவனே!
என்னழகு தின்றவ னே!

9.
பொன்னவனே! மென்னகனே! மின்னகனே! வன்னகனே!
தென்னவனே இன்பருள்இன்(று) என்னவனே! - இன்னகனே! மன்னவனே! என்மனத்து நின்றவனே! என்னழகு
தின்றவனே! வென்றவ னே!

10.
மென்னகனே! மின்னகனே! வன்னகனே! தென்னவனே இன்பருள்இன்(று) என்னவனே! இன்னகனே! - மன்னவனே!
என்மனத்து நின்றவனே! என்னழகு தின்றவனே!
வென்றவனே! பொன்னவ னே!

11.
மின்னகனே! வன்னகனே! தென்னவனே இன்பருள்இன்(று)
என்னவனே! இன்னகனே! மன்னவனே! - என்மனத்து
நின்றவனே! என்னழகு தின்றவனே! வென்றவனே!
பொன்னவனே! மென்னக னே!

12.
வன்னகனே! தென்னவனே இன்பருள்இன்(று) என்னவனே!
இன்னகனே! மன்னவனே! என்மனத்து - நின்றவனே!
என்னழகு தின்றவனே! வென்றவனே! பொன்னவனே!
மென்னகனே! மின்னக னே!

13.
தென்னவனே இன்பருள்இன்(று) என்னவனே! இன்னகனே!
மன்னவனே! என்மனத்து நின்றவனே! - என்னழகு
தின்றவனே! வென்றவனே! பொன்னவனே! மென்னகனே!
மின்னகனே! வன்னக னே!

14.
இன்பருள்இன்(று) என்னவனே! இன்னகனே! மன்னவனே!
என்மனத்து நின்றவனே! என்னழகு - தின்றவனே!
வென்றவனே! பொன்னவனே! மென்னகனே! மின்னகனே!
வன்னகனே! தென்னவ னே!

இலக்கணக் குறிப்பு

பதினான்கு மண்டிலம் என்பது  முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இப்படியாகப் பதினான்குச் சீர்களும் முதல் சீராக வந்தமையப் பாடுவது. முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். வல்லினம் மிகும் சொற்கள் இம்மண்டிலத்தில் வாரா!

19.08.2015

12 commentaires:

  1. வாசிக்க வாசிக்க... ரசிக்க ரசிக்க...
    அருமை அருமை ஐயா...

    RépondreSupprimer
  2. ஐயா வணக்கங்கள்.
    தங்களின் பதினைந்து மண்டிலத்துப் பத்து மற்றும் பதினொன்றாம் வெண்பாக்கள் மீள வருகின்றன.

    அன்றியும் ‘இன்று’ என்னும் சீர்பற்றி ஒரு வெண்பா எழுப்பப்படவில்லை.
    எனவே இது பதினான்கு மண்டிலித்தன்றோ வருகிறது?
    சந்த வசந்தத்தில் இலந்தையாரும் இதுபோன்றே எழுதியிருந்தார்.
    நேற்று முன்தினம் இதுகுறித்துக் குறிப்பிட்டிருந்தேன்.

    ஐயங்களைந்திட வேண்டுவன்.

    நன்றி

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பதினான்கு மண்டிலமாகத் திருத்தம் செய்துவிட்டேன்
      நன்றி

      Supprimer
  3. வணக்கம்
    ஐயா

    வற்றதா நதிபோல வளமிக்க சொற்கள். நயத்துடன் அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    த.ம 3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  4. எங்கும் மண்டிலமாக தண்டமிழை முழங்க வைக்கும் ஆசானுக்கு எனது வியப்பான வணக்கமும் வாழ்த்தும்.
    வலையெங்கும் வெண்பா விளையாட்டு.
    இப்போது வேடிக்கை பார்க்கிறேன். பயிற்சிக்குப்பிறகு எழுத முயற்சிக்கிறேன்.
    நன்றிங்க ஐயா.

    RépondreSupprimer
  5. என்னழகு தின்றவனே..அதிகம் ரசித்தேன். நன்றி.

    RépondreSupprimer
  6. தவறாக நினைக்க வேண்டாம் ஐயா! வெண்பாவில் 10, 11ம் பாக்கள் ஒரே மாதிரியாக அமைந்துள்ளன. சீர் மாறி வரவில்லை! சரிபார்க்கவும்! நன்றி!

    RépondreSupprimer
  7. வணக்கம் ஐயா!

    பதினைந்து மண்டலப் பா!.படைப்பைக் கண்டேன்!
    அதிலுள்ள சூக்குமம் அற்புதமே! அத்தனையும்
    இன்பம் இனிமை எழிற்பூக்கள்! எல்லாமே
    உன்னாலே பெற்ற உயர்வு!

    பதினைந்து ,மண்டலப் பா எப்படி நாமெல்லாம் எழுதுவது
    என்ற வியப்பொடு இருக்கையில் இப்படியும் முயலலாம்
    என எழுதிக் காண்பித்தீர்கள்! அற்புதம்!
    சுவை மிக்க ஆரம்ப வெண்பா எங்கும் இனிமை குன்றாமல்
    தொடராக 15 பாக்களிலும் வர அமைப்பது
    என்னளவில் ஒரு பெரிய சாதனைதான்!

    மிகவும் சிறப்பு! நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
  8. அப்பாடா அடுத்த கட்ட சோதனை ஆரம்பமாகி விட்டது எமக்கும் முயற்சிக்கின்றேன் ஐயா வாழ்த்துக்கள் தங்களைப் போன்று பா வடிக்க இயலாது அவ்வளவு அற்புதமாக இருக்கும் தங்களின் ஆளுமை அருமை ! பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .

    RépondreSupprimer
  9. வணக்கம் !
    என்னவென்று பாராட்ட ஏடெடுத்து நீரெழுத
    மின்னுதேபா வெல்லாம் மிளிர்ந்து!

    வண்ணப்பா தந்து வல்லமையை காட்டுகிறீர்
    எண்ணம்போல் எல்லாம் சிறப்பு !

    அருமையாக வடித்தீர் அற்புதப் பாக்கள் ஐயா மிக்க நன்றி ! வாழ்த்துக்கள் ...!

    RépondreSupprimer
  10. எத்தனை விதமான பாக்கள்! இந்த வகையை இதுவரை அறிந்ததில்லை அருமை

    RépondreSupprimer
  11. வான்பொழியும் பொன்மழைபோல் வண்ணத் தமிழென்னும்
    தேன்பொழியும் தீங்கவிச் செல்வரே! - நான்மொழியும்
    சீருரை ஏற்பீர்! சிறந்தவுன் மின்வலைக்குப்
    பாருரை ஏற்பீர் பழுத்து!

    RépondreSupprimer