dimanche 14 juillet 2013

காதல் ஆயிரம் [பகுதி - 104]




காதல் ஆயிரம் [பகுதி - 104]
 
896.
எந்தவொரு பெண்ணை இமையசைத்துப் பார்க்காத
சிந்தையொரு சீர்நிலையைப் பெற்றிருந்தேன்! - அந்தவொரு
நன்னிலையைக் கொன்றேன்! நறுந்தவ நங்கையுன்
மின்விழியைக் கண்டேன் மிதந்து!

897.
மொட்டுக்கு உறவாகும் முன்னழகைக் கண்டவுடன்
சிட்டுக்கு உறவாகும் என்சிந்தை! - கட்டழகே!
கட்டுக்கு அடங்காத என்காதல் வெண்பாட்டுக்
கட்டுக்கு அடங்குமோ காண்!

898.
மறைவாக நீ..கொடுத்த மல்லிகை முத்தம்
நிறைவாகக் காதலை நீட்டும்! - குறைவாகத்
தோன்றுமே என்னகவை! தூயவளே அந்நினைவு
ஊன்றுமே இன்பம் உரை!

899.
பாவை விளக்காக! பச்சைக் கிளியாக!
கோவைக் கவியாகக் கொண்டொளிரும் - தேவியே!
கோவை இதழிரண்டைக் கொஞ்சிக் களித்தபின்
தேவை இலையடி தேன்!

900.
கூடைக் கனியாக! கொத்து மலராக!
ஓடைக் குளிராக ஒண்டமிழை - மேடையிலே
சொல்லாடும் பேரழகில் சொக்கியே எந்நாளும்
அல்லாடும் என்றன் அகம்!

(தொடரும்)

9 commentaires:

  1. Réponses

    1. வணக்கம்!

      இரண்டு இனியசொற்கள்! என்னை மயக்கத்
      திரண்டு பெருகிடும் தேன்!

      Supprimer
  2. வணக்கம் !
    காதல் கவிதை மழையில் நனைந்தோம் மனம் குளிர .
    வாழ்த்துக்கள் ஐயா .

    RépondreSupprimer
  3. ஐந்து வெண்பாக்களும் சிறப்பு.மின்விழி புதுமையான உருவகம்.தொடர்கிறேன். ஐயா

    RépondreSupprimer
  4. மணக்கும் முத்தத்தோடு மயக்க வைத்தது வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

    RépondreSupprimer
  5. arumai thozharey, ungal varigal udal silirka vaikkiradhu.......thodarattum ungal tamizh payanam.............

    RépondreSupprimer
  6. கூடை கூடையாய்க் கொட்டும் பனிமலர்க் குளிர்ச்சிதரும் பாக்கள்!!!
    ஐயா!...
    மன்மதனே மயங்கிப்போவான் உங்கள் கவிகண்டு..
    நாங்கள் எம்மாத்திரம்....

    காதல்ரசம் சொட்டும் பாக்கள். சொற்கள் அத்தனையும் சொட்டும்தேன் சுவை!

    வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer

  7. காதலின் வேதமாய்க் கற்போர் புகழ்ந்துரைக்க!
    ஊதலின் மெல்லிசை ஊற்றெழும்ப! - மாதவமாய்
    நல்லதொள் ளாயிரமும் நற்றமிழ்த் தாய்தந்த
    வல்லதொள் ளாயிரம்! வாழ்த்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      அந்தமுத்தொள் ளாயிரம்போல் அன்பன்யான் தந்துவந்த
      இந்தநற்றொள் னாயிரம் இங்குயா்ந்தால் - வந்து
      பிறந்தஎன் ஆன்மா சிறந்தவாழ் வெய்தும்!
      நிறைந்தஇன் பத்துள் நிழலத்து!

      Supprimer