jeudi 27 juin 2013

வாழ்க பல்லாண்டு!




மணமக்கள் வாழ்க பல்லாண்டு!

வண்ண மலர்வனமும் வாச நறுங்காற்றும்
எண்ணம் அமர்ந்தே எழிலூட்ட! - உண்ணுகவே
இல்லற இன்னமுதைச் சோஃபியும் அர்மானும்!
நல்லறம் காண்கவே நன்கு!

அன்பிற் கனிந்த சிவஅரியும்
     அருளிற் கனிந்த கோமதியும்
இன்பிற் கனிந்து வளர்த்திட்ட
     இனிய செல்வி எழிற்சோஃபி
என்பிற் கனிந்த காதலிலே
     இணையும் செல்வன் நல்அர்மான்
மன்றிற் கனிந்த இந்நாள்போல்
     வாழ்க! வாழ்க! பல்லாண்டே!

பாடும் சின்ன குயிலிசையும்
     படரும் பச்சைக் கிளிமொழியும்
ஆடும் வண்ண மயில்நடமும்
     அமுதும் தேனும் முக்கனியும்
ஈடும் உண்டோ எனவோதும்
     இளமைத் தமிழின் பெருவளமும்
கூடும் சோஃபி நல்அர்மான்
     கொண்டு வாழ்க பல்லாண்டே!

26.06.2013

27 commentaires:

  1. பதினாறும் பெற்றுவாழ வழியுண்டு
    மணமக்கள் வாழ்க பல்லாண்டு!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பதினாறு செல்வங்கள் பற்றிப் படா்க!
      மதிநுாறு மின்னும் மனத்து!

      Supprimer
  2. மணமக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வாழ்க மணமக்கள் வல்ல குறள்வழியில்
      சூழ்க நலங்கள் சுடா்ந்து!

      Supprimer
  3. அழகு மனஞ்சேர்ந்து அன்பால் இணைந்தீரென்று
    பழகு பைந்தமிழினில் பாடிய வாழ்தினிலே
    இலகும் இனிமையும் இரண்டறகலந்தே தந்தீர்
    உலகும் போற்றும் உன்னத கவிநீரென்றே!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    அருமையான வாழ்த்துப்பா தந்தீர்கள்!
    மிகச்சிறப்பு!

    மணமக்களுக்கு என் உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்!

    த ம.3

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இளமதி தநத இளியதமிழ்ச் சீா்கள்
      உளமதில் நிற்கும் ஒளிர்ந்து!

      Supprimer
  4. மணமக்கள் வாழ்க பல்லாண்டு!வாழ்த்துகள்..!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பல்லாண்டு வாழ்க! பசுந்தமிழ்ச் சீா்களை
      நல்லாண்டு வாழ்க நயந்து!

      Supprimer
  5. மிக மிக அருமையான கருத்துச் செறிந்த வாழ்த்துக்கவிதை!

    கிடைக்கப்பெற்ற மணமக்களுக்கு எமது நல் வாழ்த்துக்கள்!

    மிக்க நன்றி கவிஞர் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அருமைக் கவியின் அழகைச் சுவைத்தால்
      பெருமை பெருகும் பிணைந்து!

      Supprimer
  6. Réponses

    1. வணக்கம்

      வாழ்தொலி ஓங்க வளா்தமிழே! இல்லறத்தைச்
      சூழ்ந்தொளி செய்க சுடா்ந்து!

      Supprimer
  7. மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யா

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கரந்தைச் செயகுமார் கட்டும் தமிழ்ச்சொல்
      கருத்தைக் கவரும் கமழ்ந்து!

      Supprimer
  8. உங்களுடன் சேர்ந்து நாங்களும் வாழ்த்துகின்றோம் ஐயா
    மணமக்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கவென .......

    RépondreSupprimer
    Réponses

    1. அம்பாள் அளித்த அருந்தமிழ் அத்தனையும்
      அம்..மால் அளித்த அணி!

      Supprimer
  9. அவர்களுக்கு வாழ்த்துகள் அய்யா...

    அய்யா. முன்பெல்லாம் என் தளத்திற்கு வந்து தவறுகளை சுட்டிக்காட்டி விட்டுச் செல்வீர்கள், இப்போதெல்லாம் காண இயலவில்லையே அய்யா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நிறைந்த தமிழ்ப்பணியால் நேரம் மிகவும்
      குறைந்து நெருக்கும்! கொடுக்கும் பதிவுகளைக்
      கண்டு களித்துக் கருத்தெழுத வந்திடுவேன்!
      தொண்டு சிறக்கும் தொடா்ந்து!

      Supprimer
  10. மணமக்கள் வளமுடன் வாழ்க

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      புலவரின் வாழ்த்துப் புவியையும் தாண்டும்
      குலவுதமிழ் இன்பம் குவித்து!

      Supprimer

  11. எல்லா வளமும் இருந்து சிறந்திடவே
    அல்லா திருக்கை அருளுகவே!- பல்லாண்டு
    பாடி மகிழ்ந்தேன்! பசுந்தமிழில் வாழ்த்தினைச்
    சூடி மகிழ்ந்தேன் சுடா்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பல்லாண்டு வெண்பாவில் பைந்தமி ழன்னையவள்
      நல்லாண்டு செய்தாள் நலம்!

      Supprimer
  12. மணமக்கள் இருவருக்கும் மனம்கனிந்த வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!
      மனங்கனிந்து வாழ அளித்திட்டீா் வாழ்த்து!
      இனமணிந்த மாண்பை இசைத்து!

      Supprimer

  13. இனிய தமிழ் உறவுகளே வணக்கம்!

    ஈருடல் ஓருயிராய் ஒன்றி இயங்கிடவும்
    பேருயா் செல்வங்கள் பெற்றிடவும்! - சீருயர
    வாழ்க மணமக்கள்! வளமார் குற்ள்நெறியைச்
    சூழ்க மணமக்கள் தோய்ந்து!

    RépondreSupprimer

  14. இனிய தமிழ் உறவுகளே வணக்கம்!

    பதினாறு செல்வங்கள் பற்றிப் படர!
    மதிகூறு நுால்வழி வாழ! - குதித்தாடும்
    ஈசன் அருளுகவே! ஈடில் திருமங்கை
    நேசன் அருளுகவே நீடு!

    RépondreSupprimer

  15. அன்பாம் அமுதருந்தி அா்மானும் சோஃபியும்
    இன்பமாய் வாழ்க இணைந்து!

    RépondreSupprimer