lundi 10 juin 2013

துணிந்து நில்








துணிந்து நில்

விதிதனை மதியால் வெல்லு - உலகில்
வீரனாய்த் துணிந்து நில்லு!
சதிதனை எதிர்த்துக் கொல்லு - என்றும்
சத்தியம் காக்கும் சொல்லு!

சாதியின் தாழ்வைத் தள்ளு - எங்கும்
சமத்துவம் கண்டு துள்ளு!
நீதியாம் தராசின் முள்ளு - கூறும்
நிலைமையை மனத்தில் கொள்ளு!

செந்தமிழ்த் தாயைப் போற்று - என்றும்
செழிப்புடன் கடமை ஆற்று!
சிந்தையில் மடமை அகற்று - உளம்
சீர்படும் கவிகள் இயற்று!

11.01.1980
 

4 commentaires:

  1. அப்படிச் சொல்லுங்க ஐயா...

    நன்றி... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  2. மதியும் வீரமும் உறுதியும் இருந்திட்டால்
    விதியும் வீழ்ந்திடாதோ விரைந்து...

    அழகான அருமையான கவி ஐயா!
    பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!.

    த ம. 3

    RépondreSupprimer
  3. சிந்தையின் மடமை அகற்று
    அருமை அய்யா

    RépondreSupprimer
  4. துணிவு கவிதை மிகவும் அருமை ஐயா

    RépondreSupprimer