பொங்குக பொங்கல் புகழ்தரும் சீரேந்திதங்குக எங்கும் தமிழினிமை! - மங்குகவேபொல்லார் புரிவினை! பூவுலகு வாழ்கவேஎல்லாரும் எல்லாமும் ஏற்று!
வணக்கம்!எல்லாரும் எல்லாமும் ஏற்று மகிழ்ந்திடவல்லான் மலரடியை நான்தொழுதேன்! - நல்லகவிபாடும் கவிஞர் தமிழ்ச்செல்வன் பாங்குடன்சூடும் கருத்தே சுவை!
RépondreSupprimerபொங்குக பொங்கல் புகழ்தரும் சீரேந்தி
தங்குக எங்கும் தமிழினிமை! - மங்குகவே
பொல்லார் புரிவினை! பூவுலகு வாழ்கவே
எல்லாரும் எல்லாமும் ஏற்று!
RépondreSupprimerவணக்கம்!
எல்லாரும் எல்லாமும் ஏற்று மகிழ்ந்திட
வல்லான் மலரடியை நான்தொழுதேன்! - நல்லகவி
பாடும் கவிஞர் தமிழ்ச்செல்வன் பாங்குடன்
சூடும் கருத்தே சுவை!