jeudi 11 novembre 2010

கண்ணீா் அஞ்சலி

ஆதிதமிழ் காக்கும் அருந்தொண்டில் முன்னின்று
பாதிவழி காட்டிப் பறந்ததுமேன்! - நீதியோ!
மீதிவழி  யானறியேன்! மீளாத் துயா்தந்து
சோதிவழி சென்றதுமேன் சொல்லு! 




3 commentaires:


  1. உயரடி தேடி உயர்சிமோன் சென்றார்!
    துயரடி நம்மைத் துளைக்க! - மயா்விலான்
    எண்ணம் அறிவார்யார்? ஈசன் இணையடியை
    நண்ணி வணங்குவோம் நாம்!

    RépondreSupprimer
    Réponses

    1. செம்மைத் தமிழ்ப்பணியைச் சென்னி தரித்திங்கு
      நம்மை உயர்வித்த நன்மனத்தர்! - இம்மண்ணை
      விட்டுப் பிரிந்தார்! விடைதேடி நிற்கின்றோம்!
      கட்டுக் குலைந்தோம் கழன்று!

      Supprimer
  2. வணக்கம் ஐயா!

    நீதியோ காலனே! நீள்வாழ்வு தான்சுருங்க!
    சேதியின்றும் துக்கமிகுத் தே!

    RépondreSupprimer