dimanche 2 janvier 2022

கலம்பக வெண்பா

 

வெண்பா மேடை - 216

 

கலம்பக வெண்பா

 

ஈற்றடி ஒழித்த ஏனைய அடிகள்  எழுத்து ஒவ்வாது வரும் வெண்பா. கட்டளை வெண்பாவிற்கு மறுதலையாயது.

 

இறையருள் வண்ணம் இதயத்துள் சூழ்க!

நிறையறன் எண்ணம் நிலைக்க! - மறைபொருளைப்

போற்றிமனம் ஆழ்க! புவிமணக்க அன்பொளியை

ஏற்றிமனம் காண்க எழில்!

 

[பாட்டரசர்]

 

இதன்கண் முதலடி எழுத்துப் பன்னிரண்டு, இரண்டாமடி எழுத்துப் பதினான்கு, மூன்றாமடி எழுத்துப்  பதினைந்து, இவ்வாறு எழுத்து எண்ணும்பொழுது ஒற்றும் ஆய்தமும், குற்றுகரமும் தவிர்கப்படும்.

'கலம்பக வெண்பா' ஒன்று எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம்  பிரான்சு

02.01.2022

Aucun commentaire:

Enregistrer un commentaire