lundi 3 janvier 2022

கேட்டலும் கிளத்தலும்

 

கேட்டலும் கிளத்தலும்

 

தனிக்குறிலை ஈற்றாகப் பெற்று வெண்பா அமையுமா?


மணியன், புதுவை

 

--------------------------------------------------------------------------------------------------------------------

 

தனிக்குறிலை ஈற்றாகப் பெற்று வெண்பா அமையும். எனினும் சிறப்பன்று என்பது யாப்பருங்கல விருத்தியுரையார் கருத்து.

 

நுண்மைசால் கேள்வி நுணங்கியோர் சொல்லையாய்

தொன்மைசால் நன்மருந் து

 

எனவும்

 

நெடுநுண் சிலையலைக்கும்  நீர்மைத்தே பேதை

கொடிநுண் புருவக் குலா

 

எனவும் தனிக்குறில் நேரசையும், நெடிலுடை நிரையசையும் இறுதிக்கண் அருகி வந்தனவாயினும் சிறப்பின்மை உச்சரித்துக் கண்டு கொள்க. [ யா.க.வி - 57]

 

ஏற்றமண வாள ரிசைத்தாரந் தாதிவெண்பா!

தோற்றக்கே டில்லாத தொன்மாலைப் - போற்றத்

திருப்பதியாம் நுாற்றெட் டினையுஞ்சே விப்போர்

கருப்பதியா வண்ணமுண்டா க!

 

[பிள்ளைப் பெருமாளையங்கார் அருளிய நுாற்றெட்டுத் திருப்பதியந்தாதி - 1]

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

03.01.2022

Aucun commentaire:

Enregistrer un commentaire