வெண்பா மேடை - 217
சமநடை வெண்பா
ஈற்றடி
எழுத்தும் ஏனைய அடி எழுத்தும் ஒத்து வருகிற வெண்பா சமநடை வெண்பாவாம்.
நன்றே உழைத்து நயந்து நலஞ்சூடு! - 9
வென்றே விரிந்து விளையாடு! - மன்றே - 9
மணந்து புகழ்ந்து மகிழ்ந்து திளைக்க - 9
உணர்ந்தே உயர்தமிழை ஓது! - 9
கண்டு கனிந்து கதைத்து மணந்து..நாம் - 8
பண்பு
மலர்ந்து படர்ந்து..நாம் - பெண்ணே! - 8
களிப்பு நிறைந்து கமழ்ந்து மகிழ்ந்து - 8
[பாட்டரசர்]
எழுத்து எண்ணும்பொழுது ஒற்றும் ஆய்தமும், குற்றுகரமும் நீக்கிக் கணக்கிட வேண்டும். மேலுள்ள வெண்பாவில் ஒற்றும் குற்றுகரமும் நீங்க அடிதோறும் 9 எழுத்துக்கள் வந்தன.
'சமநடை வெண்பா' ஒன்று எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
பாலவர் பயிலரங்கம் பிரான்சு
10.01.2022
Aucun commentaire:
Enregistrer un commentaire