lundi 10 janvier 2022

பாவினங்கள்

கேட்டலும் கிளத்தலும்

 

ஐயா வணக்கம்!

பாவினங்களைத் தொகுத்துரைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

மணியன், புதுவை

06.012022

--------------------------------------------------------------------------------------------------------------------------

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற பாக்கள் நான்கற்கும் தாழிசை, துறை, விருத்தம் என்ற இனங்கள் அமையும்.

வெண்செந்துறை, குறட்டாழிசை, வெள்ளொத்தாழிசை, வெண்டாழிசை, ஓரொலி வெண்டுறை, வேற்றொலி வெண்டுறை, வெளிநிலை விருத்தம், வெளிமண்டில விருத்தம் என வெண்பா இனம் ஏட்டாகும்.

ஆசிரிய ஒத்தாழிசை, ஆசிரியத்தாழிசை, ஆசிரிய நேர்த்துறை, ஆசிரிய இணைக்குறட்டுறை, ஆசிரிய நிலை விருத்தம், ஆசிரிய மண்டில விருத்தம் என ஆசிரியப்பா இனம் ஆறாகும்.

கலி ஒத்தாழிசை, கலித்தாழிசை, கலித்துறை, கலிவிருத்தம், கலிநிலைத்துறை, கலி மண்டிலத்துறை, கட்டளைக் கலித்துறை, கலிநிலை விருத்தம்,  கலி மண்டில விருத்தம், எனக் கலிப்பா இனம் ஒன்பதாகும்.

வஞ்சி நிலைத்தாழிசை, வஞ்சி மண்டிலத்தாழிசை, வஞ்சி நிலைத்துறை, வஞ்சி மண்டிலத்துறை, வஞ்சி நிலைவிருத்தம், வஞ்சி மண்டில விருத்தம், என வஞ்சிபா இனம் ஆறாகும்.

பாவினங்களின் விரி இருபத்தொன்பதாம். [யாப்பருங்கல விருத்தி, பாயிரம் உரை]

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்
09.01.2022

 

Aucun commentaire:

Enregistrer un commentaire