தெம்மாங்கு
[சந்தையிலே மீனு வாங்கி என்ற மெட்டு]
1.
சுங்கு
சுங்கு சுங்க றாளே - யெனச்
சுட்டுச்
சுட்டுத் திங்க றாளே!
நுங்கு
நுங்கு விக்க றாளே - இவ
நோக்கு
வர்மம் கற்க றாளே
2.
சிங்கு
சிங்கு சிங்கு றாளே - யென்
சிந்தை
குள்ளே தொங்க றாளே!
அங்கும்
இங்கும் பார்க்க றாளே - பல
ஆட்டங்
காட்டிச் சேர்க்க றாளே!
3.
கெண்டை
மீனு கண்ணு காரி - வீரச்
சண்டை
செய்யும் மண்ணு காரி
கொண்டை
போட்டுக் காட்டு றாளே - இவ
தண்டைத்
தாளம் மீட்டு றாளே!
4.
நீண்ட
நீண்ட மூக்குக் காரி - இவ
நெஞ்சை
மாத்தும் வாக்குக காரி
வேண்ட
வேண்ட விஞ்சி றாளே - இவ
வித்தை
காட்டிக் கொஞ்சி ராளே
5.
முத்து
முத்துப் பல்லு காரி - இவ
மேகம்
மூட்டும் சொல்லு காரி
கத்திக்
கத்தி ஓட்டு றாளே - யென்
காதல்
நெஞ்ச வாட்டு றாளே!
6.
செக்கச்
செவந்த நாக்குக் காரி - அவ
சினிமா
காட்டும் போக்குக் காரி
சொக்கக்
சொக்கச் செய்யு றாளே - யெனச்
சும்மா
நாளும் வய்யு றளே!
7.
சங்கு
சங்குக் கழுத்துக் காரி - இவ
சங்க
கால எழுத்துக் காரி
மங்கு
மங்கு குத்த ராளே - இவ
மாயக்
கண்ண சுத்த ராளே!
8.
முல்ல
மெட்டு கொம்புக் காரி - அவ
முட்டித்
தள்ளும் வம்புக் காரி
கல்ல
தொட்டுக் காட்டு றாளே - யென
காக்கா
வென்றே ஓட்டு றாளே!
9.
சிலுக்குக்
சேலத் தோணிக் காரி - நெஞ்ச
சிலுக்கச்
செய்யும் மேனிக் காரி
குலுக்கிக்
குலுக்கிச் செல்ல றாளே - யெனக்
குத்திக்
குத்திக் கொல்ல றாளே
10.
தண்ட
பேட்ட காலு காரி - யெனத்
தாக்க
வந்த வேலு காரி
வெண்டக்
காட்டுப் பக்கதிலே - அவ
விருப்பம்
சொன்னா வெக்கத்திலே
பாட்டரசர்
கி. பாரதிதாசன்
24.04.2021