வெண்பா மேடை - 206
ஐந்து ஈற்றடிகள்
தாவணிப் பேரழகே! தங்கமே! தண்ணமுதே!
தா..அணி முத்தம் தழைத்து!
தாவணிப் பேரழகே! தங்கமே! தண்ணமுதே!
பாவணி மின்னும் படர்ந்து!
தாவணிப் பேரழகே! தங்கமே! தண்ணமுதே!
மாவணி மேவும் மனத்து!
தாவணிப் பேரழகே! தங்கமே! தண்ணமுதே!
நாவணி தாராய் நடந்து!
தாவணிப் பேரழகே! தங்கமே! தண்ணமுதே!
ஆவணித் தேனை அளி!
குறட்பாவின் முதலடிக்கு ஐந்து ஈற்றடிகள் பொருந்தும் வண்ணம், ஐந்து குறட்பா வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
13.07.2021
Aucun commentaire:
Enregistrer un commentaire