dimanche 2 avril 2023

சந்தக் கலிவிருத்தம் - 12

 


விருத்த மேடை - 94

 

சந்தக் கலிவிருத்தம் - 12

 

தந்தன+தனதாம்+தந்தன+தனதாம்

[நான்கு சீர்களும் 4 சந்த மாத்திரை]

 

குஞ்சரம் அனையார்! சிந்தைகொள் இளையார்!

பஞ்சினை அணிவார்! பால்வளை தெரிவார்!

அஞ்சனம் என,வாள் அம்புகள் இடையே

நஞ்சினை இடுவார்! நாண்மலர் புனைவார்!

 

[கம்பன், அயோத்தியா. கைகேயி சூழ்வினை - 68]

 

தந்தன+தனதாம்+தந்தன+தனதாம் என்ற அமைப்புடைய பாடல் இது. எல்லாமே நான்கு 4 சந்த மாத்திரைச் சீர்கள். தனதாம் வரும் இடங்களில் தனனாவும் வரும். தந்தன வரும் இடங்களில் தாந்தன என்பதும் வரும். மோனை 1, 4 ஆம் சீர்களில் அமையும்.

 

வடலுார் வள்ளல்

 

உள்ளொளி யுடையார்! ஒள்ளொலி மறையார்!

வெள்ளொளி உடையார்! விண்ணளி மழையார்!

கள்ளளி கவியார்! கண்ணொளி யிணையார்!

வள்ளொளி வடலுார் வாழ்கிற பெரியார்!

 

[பட்டரசர்]

 

மேற்கண்ட சந்தக் கலிவிருத்தம் ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

02.04.2023                             

Aucun commentaire:

Enregistrer un commentaire