lundi 15 août 2022

ஆற்றுநீர்ப் பொருள்கோள்

 வெண்பா மேடை - 223

 ஆற்றுநீர்ப் பொருள்கோள் - 2

 

221 ஆம் வெண்பா மேடையில்  முதல் சீரிலிருந்து ஈற்றுச்சீர்வரை சொற்கள் முன் பின் மாறாமல் நேராகச் சென்று பொருள் தருவது யாற்றுநீர்ப் பொருள்கோள் எனக் கண்டோம்.

 

அடிதோறும் பொருள் அற்று அற்று ஒழுகுவதும் யாற்றுநீர்ப் பொருள்கோளாம்.

 

அலைப்பான் பிறிதுயிரை ஆக்கலும் குற்றம்!

விலைப்பாலின் கொண்டூன் மிசைதலும் குற்றம்!

சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்!

கொலைப்பாலும் குற்றமே யாம்!

 

[நான்மணிக் கடிகை - 28]

 

பொய்யுரை நீக்கப் பொலிந்திடும் நெஞ்சகம்!

மெய்யுரை பூக்க விளைந்திடும் - செய்தவம்!

ஈசன் திருவருளால் இன்னுயிர் வீடுறும்!

வாசத் தமிழை வணங்கு!

[பாட்டரசர்]

 

இப்பாடல்களில் பொருள் அடிதோறும் தனித்தனியே நிறைவுற்றது.


பாட்டரசர் கி. பாரதிதாசன்

14.08.2022

Aucun commentaire:

Enregistrer un commentaire