வெண்பா மேடை - 207
பத்து ஈற்றடிகள்
1.
வண்ணத் தமிழ்மொழியே வந்தருள்வாய்! எந்நாளும்
எண்ணம் இனிக்கும் இசை!
2.
வண்ணத் தமிழ்மொழியே வந்தருள்வாய்! எந்நாளும்
திண்ணம் ஒளிரும் செயல்!
3.
வண்ணத் தமிழ்மொழியே வந்தருள்வாய்! எந்நாளும்
அண்ணல் குறள்சேர் அறம்!
4.
வண்ணத் தமிழ்மொழியே வந்தருள்வாய்! எந்நாளும்
தண்மை தழைக்கும் தகை!
5.
வண்ணத் தமிழ்மொழியே வந்தருள்வாய்! எந்நாளும்
வண்மை வளரும் வளம்!
6.
வண்ணத் தமிழ்மொழியே வந்தருள்வாய்! எந்நாளும்
உண்மை ஒளிரும் உளம்!
7.
வண்ணத் தமிழ்மொழியே வந்தருள்வாய்! எந்நாளும்
மண்ணே மணக்கும் மதி!
8.
வண்ணத் தமிழ்மொழியே வந்தருள்வாய்! எந்நாளும்
கண்ணே கமழும் கவி!
9.
வண்ணத் தமிழ்மொழியே வந்தருள்வாய்! எந்நாளும்
பண்ணே பழுக்கும் படைப்பு!
10.
வண்ணத் தமிழ்மொழியே வந்தருள்வாய்! எந்நாளும்
விண்ணே விளிக்கும் விழா!
நீங்கள் எழுதும் குறட்பாவின் முதலடிக்குப் பத்து ஈற்றடிகள் பொருந்தும் வண்ணம், பத்துக் குறள்கள் படைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
26.07.2021

Aucun commentaire:
Enregistrer un commentaire