jeudi 6 février 2014

சிவனருட்செல்வா்



சிவனருட்செல்வர்
சுகுமார முருகையனார்
எழுபத்தைந்தாம் ஆண்டுப் பிறந்தநாள் குறளமுதம்


முதுமொழிச் செல்வர் முருகையனார் எங்கள்
புதுவையின் செல்வரெனப் போற்று!

பெரும்புகழ்ச் செல்வர் முருகையனார் பேசித்
தரும்புகழ் சைவத் தமிழ்!

அருட்பணிச் செல்வர் முருகையனார் அன்பால்
திருப்பணி செய்தார் தினம்!

தமிழ்ப்பணிச் செல்வர் முருகையனார் தந்தார்
நமதினம் ஓங்கும் நலம்!

சிவனருட் செல்வர் முருகையனார் வாழ்க
தவமருள் வாழ்வைத் தரித்து!

அறநெறிச் செல்வர் முருகையனார் ஆழ்ந்தே
உறுநெறி ஓங்கும் ஒளிர்ந்து!

அன்பொளிர் செல்வர் முருகையனார் ஆன்றோரின்
இன்பொளிர வாழ்க இசைந்து!

பண்பொளிர் செல்வர் முருகையனார் பைந்தமிழின்
பண்ணொலிர வாழ்க படர்ந்து!

நற்பணிச் செல்வர் முருகையனார் நல்கிடும்
சொற்கனி  ஊட்டும் சுவை!

கருணையொளிர் செல்வர் முருகையனார் உற்றார்
அருணையொளி மின்னும் அகம்!

கலையொளிர் செல்வர் முருகையனார் காத்தார்
சிலையொளிர் மின்னும் சிரிப்பு!

அறிவொளிர் செல்வர் முருகையனார் ஆண்டார்
செறிவொளிர் வண்ணம் செயல்

தயவொளிர் செல்வர் முருகையனார் சான்றோர்
நயமொளிர் வாழ்வின் நடை!

உயர்குடிச் செல்வர் முருகையனார் உள்ளம்
இயலிசை வாழும் இடம்!

அருமனச் செல்வர் முருகையனார் ஆள்க
பெருமணப் பேறுகளைப் பெற்று!

எம்மினிய செல்வர் முருகையனார் எய்துகவே
செம்மொழி போன்றே செழிப்பு!

08.02.2014

10 commentaires:

  1. வணக்கம்
    ஐயா.

    இரசிக்க வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. வணக்கம்

    த.ம3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  3. குறளமுதம் மிகவும் அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  4. அமுதம் பருகி அளவில் மகிழ்வே
    குமுதம் மலரென காண்.

    RépondreSupprimer
  5. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4-part2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    RépondreSupprimer
  6. குறளமுதம் நன்றாக இருக்கிறது..
    எனது வாழ்த்துக்களும் சேரட்டும்

    RépondreSupprimer
  7. திருவருட் செல்வர் ஐயா முருகைனாரை
    நாமும் வணங்கி வாழ்த்துகிறோம்!

    RépondreSupprimer
  8. "அருமனச் செல்வர் முருகையனார் ஆள்க
    பெருமணப் பேறுகளைப் பெற்று!" என்ற
    கருத்தை விரும்புகிறேன்!

    RépondreSupprimer
  9. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்

    வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - மூன்றாம் நாள்

    RépondreSupprimer