vendredi 24 mai 2013

வேலி உண்டோ?






வேலி உண்டோ?

காற்றுக்கு வேலி உண்டோ? - எழுதும்
       கவிதைக்கு வேலி உண்டோ? - பொங்கும்
ஊற்றுக்கு வேலி உண்டோ? - மொழி
       உணர்வுக்கு வேலி உண்டோ?

நிலவுக்கு வேலி உண்டோ? - காதல்
       நினைவுக்கு வேலி உண்டோ? - காட்டு
மலருக்கு வேலி உண்டோ? - கமழ்
       மணத்திற்கு வேலி உண்டோ?

புகழுக்கு வேலி உண்டோ? - இயற்கை
       பொலிவுக்கு வேலி உண்டோ? - அறிவுச்
சுடருக்கு வேலி உண்டோ? - நாட்டுத்
       தொண்டுக்கு வேலி உண்டோ?

கதிருக்கு வேலி உண்டோ? - நற்
       கருணைக்கு வேலி உண்டோ? - காலை
விடிவுக்கு வேலி உண்டோ? - வியன்
       தமிழுக்கு வேலி உண்டோ?

10-05-2001

13 commentaires:

  1. வேலியில்லை வேலியில்லை
    விடுதலை விரும்பிக்கு வேலிஇல்லை
    வேலியில்லை வேலியில்லை
    விருந்தாகும் உம்கவிதைக்கு வேலிஇல்லை
    வேலியில்லை வேலியில்லை
    வேகங்கொண்ட தமிழிற்கும் வேலியேஇல்லை!

    அழகிய கவிதை ஐயா! அருமை!

    நாளைய குறளரங்கவிழா இனிதே நடைபெற நல்வாழ்த்துக்கள்!

    த ம. 2

    RépondreSupprimer
  2. இவை எதற்குமே வேலியில்லை வாழ்த்துக்கள்
    ஐயா மனம் போல கவிதை மழையும் பொழியட்டும் !

    RépondreSupprimer
  3. நிச்சயம் இல்லை
    வரப்புகளாலும் வேலிகளாலும்
    எல்லைக்கோடுகளாலும் தானே
    உலகில் இத்தனை பெரும் தொல்லை
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  4. வேலியிட்டு வரையறுக்க இயலாத கவியினிமையில் சொக்கிப்போனேன். அற்புதமானக் கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா.

    RépondreSupprimer
  5. அருமை... தங்களின் கற்பனைகளுக்கும் வேலி இல்லை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  6. உண்டென்று எதைச்சொல்வோம்.
    உங்கள் எண்ணங்களுக்கும் எழுத்திற்கும் உண்டே எங்களை கட்டிப்போடும் தன்மை. நன்றிங்க ஐயா.

    RépondreSupprimer
  7. வேலி இல்லா விரிவான தமிழ்க்கவிதை ..!

    RépondreSupprimer
  8. காட்டாறாய் பொங்கி ...தேனாற்றில் கலந்து ...தமிழமுதக் கடலில் சங்கமிக்கும் உங்கள் கவிதை அருமை...மிக அருமை ..

    RépondreSupprimer
  9. "காற்றுக்கு வேலி உண்டோ? - எழுதும்
    கவிதைக்கு வேலி உண்டோ?" என்று தொடுத்து
    "காலை
    விடிவுக்கு வேலி உண்டோ? - வியன்
    தமிழுக்கு வேலி உண்டோ?" என்று முடித்து
    விரிந்து செல்லும் எண்ணங்களுக்கு வேலி உண்டோ?
    எண்ணங்களை வடிக்கும் படைப்பாளிகளின்
    பதிவுகளுக்கும் வேலி உண்டோ? - இந்தத்
    தமிழில் என எண்ண வைத்திருக்கிறது
    உங்கள் கவிதை என்பேன்!

    RépondreSupprimer
  10. கவிதைக்கும் வேலி இல்லை
    கற்பனைக்கும் வேலி இல்லை
    தமிழின் இனிமைக்கும் வேலி இல்லை
    தமிழ்ப் பெருமைக்கும் வேலி இல்லை

    RépondreSupprimer