jeudi 16 mai 2013

துணிந்து நில்





துணிந்து நில்

விதிதனை மதியால் வெல்லு! - தமிழ்
வீரனாய்த் துணிந்து நில்லு!
சதிதனை எதிர்த்துக் கொல்லு! - என்றும்
சத்தியம் காக்கும் சொல்லு!

சாதியின் தாழ்வைத் தள்ளு! - எங்கும்
சமத்துவம் கண்டு துள்ளு!
நீதியாம் தராசின் முள்ளு! - கூறும்
நிலைமையை மனத்தில் கொள்ளு!

செந்தமிழ்த் தாயைப் போற்று! - என்றும்
செழிப்புடன் கடமை ஆற்று!
சிந்தையில் மடமை அகற்று - உளம்
சீர்படும் கவிகள் இயற்று!

23.05.1980 

6 commentaires:

  1. வணக்கம் !
    சிறப்பான வரிகள் வாழ்த்துக்கள் ஐயா ..

    RépondreSupprimer
  2. சிந்தையில் மடமை அகற்று - உளம்
    சீர்படும் கவிகள் இயற்று!//

    குழந்தைகளின் மனதில்
    பசும்மரத்தாணிபோல் பதியும் வண்ணம்
    எஈமையாகச் சொல்லிப்போன
    உயர்வான கருத்துக்கள் மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  3. வீரமிகு வரிகள் ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  4. செந்தமிழ்த் தாயைப் போற்று! - என்றும்
    செழிப்புடன் கடமை ஆற்று!
    சிந்தையில் மடமை அகற்று - உளம்
    சீர்படும் கவிகள் இயற்று!

    சீர்மிகு வரிகளுக்குப் பாராட்டுக்கள்...

    RépondreSupprimer
  5. ஐயா! ஆண்டுகள் 33 இப்பாவுக்கு!... அருமை!
    அழகிய ஆணித்தரமான வரிகள்!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    சாதித் தாழ்வை சாக்கடையில் தள்ளென்ற
    நீதியைக் கூறி நெறியுரைத்தீர்! போதித்த
    ஆண்பெண் இரண்டே யாம்சாதி அதுவும்
    வீணென்றே இப்போது வியக்குமுலகே!...

    RépondreSupprimer