samedi 18 mai 2013

காதல் ஆயிரம் [பகுதி - 93]



காதல் ஆயிரம் [பகுதி - 93]

836.
பார்ப்பதும் இன்பமடி! பாவையுன் கைவிரல்கள்
கோர்ப்பதும் இன்பமடி! பூங்குயிலே! - கூா்விழிகள்
ஈா்ப்பதும் இன்பமடி! ஈடில் கவிதைகளை
வார்ப்பதும் இன்பமடி! வா!

837.
உன்குரல் கேட்பதும் இன்பமடி! கற்பனையில்
இன்திரள் காண்பதும் இன்பமடி! - வன்திரள்
மார்பு முடிகோதி மயங்கும் மலா்விழியே!
சோ்ப்பு விதிகளைத் தீட்டு!

838.
பட்டழகு மேனி படபடக்கும்! பாவலன்
தொட்டழகு செய்யும் சுகம்பரவி! - வட்டமுகப்
பொட்டழகு! பூவழகு என்பான்! கரையுமே
கட்டழகு மெல்லக் கனிந்து

839.
காதோரம் தந்த கனிமுத்தம் ஒவ்வென்றும்
மாதோரம் சாய்த்து மகிழ்வூட்டும்! - தீதோரம்
இன்றி எனைஎடுத்தாய்! இன்பக் கவிபடித்தாய்!
குன்றிக் குலவும் குரல்!

840.
கட்டி  அணைத்துக் கவிபாடும் காலத்தில்
எட்டி விலகுவது ஏனடி? -  கட்டழகே
கொட்டிக் கொடுப்பாய்க் குளிர்ந்த இரவினிக்க
ஒட்டிப் படைப்பாய் உறவு

[தொடரும்]

5 commentaires:

  1. பார்ப்பதும் இன்பமடி! பாவையுன் கைவிரல்கள்
    கோர்ப்பதும் இன்பமடி! ///விருப்பம்தான்

    RépondreSupprimer
  2. பார்ப்பதும் இன்பமடி! பாவையுன் கைவிரல்கள்
    கோர்ப்பதும் இன்பமடி! பூங்குயிலே! - கூா்விழிகள்
    ஈா்ப்பதும் இன்பமடி! ஈடில் கவிதைகளை
    வார்ப்பதும் இன்பமடி! வா!

    அருமை ! வாழ்த்துக்கள் ஐயா இனிய நற் கவிதை வரிகளுக்கு.

    RépondreSupprimer
  3. காதலும் காந்தமும் இரட்டைப்பிறப்புகள்தாமோ?...
    ஈர்ப்பதில் இரண்டிற்கும் இணைவேறில்லை.
    கவியே உங்கள் பாக்களே அதற்குச்சான்று...

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!...

    த ம 4

    RépondreSupprimer
  4. அருமை... வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
  5. வணக்கம்
    ஐயா

    ஒவ்வொரு வரிகளையும் படிக்கும் போது மேலும் படிக்க சொல்லுகிறது அருமை வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer