
சிந்துப்பா
மேடை - 18
தெம்மாங்கு
வாழையடி
யுன்கூந்தல் வயிரமடி பற்காவி
ஏழையடி
நானுனக்கு மானே - இன்னும்
இரங்கலையோ
உன்மனது தேனே
அடி
: நான்மையின ஏகம் நான்மை
நடையில் 3 வட்டணையில்
அமைந்த ஓரடிப் பாடல்
'வாழை'
முதல் 'தேனே' வரை 12 சீர்களையுடை ஓரடி. ஒவ்வொரு
சீரும் 4 சிந்தசைகளைக் கொண்டிசைக்கும். மேலுள்ள பாடலில் 7 சீரின் ஈறு நான்கு அசைகள்
நீண்டு ஒலித்து 7, 8 ஆம் சீர்கள் ஒவ்வொன்றும் நான்கு அசைகளைப் பெறும். 11 ஆம் சீரின்
ஈறு ஆறு அசைகள் அளபெடுத்து நீண்டிசைக்கும்.
1,5
ஆம் சீர்கள் எதுகை பெற்றுவரும் [வாழை - ஏழை]
1,
3 ஆம் சீர்களில் மோனை பெறவேண்டும் [வாழை - வயிரம்]
5,
9 ஆம் சீர்கள் மோனை பெறவேண்டும் [ஏழை - இரங்கலை]
அசை பிரித்தல்
வா/ழை/ய/டி யுன்/கூந்/தல்/வ யி//ர/ம/டி பற்/கா/வி/o
ஏ/ழை/ய/டி நா/னு/னக்/கு
மா/னே/o/o - o/o/இன்/னும்
இரங்/க/லை/யோ உன்/ம/ன/து
தே/னே/o/o o/o/o/o
1.
ஒத்தையடிப்
பாதையிலே உன்னதேடி நானும்வரேன்
கொத்துமலர்
ஆடுதடி வண்டு - கூடிக்
கோலநடை
போடுதடி நண்டு
2.
துள்ளிவரும் சின்னமுயல் சொல்லுதடி உன்னழகை,
கள்ளியினைத்
தேடுதடி நெஞ்சம் - வண்ணக்
காலழகைப்
பாடுதடி மஞ்சம்!
3.
பின்னுகின்ற
சடையாகக் பின்னுகிறாய் என்னுயிரை
மின்னுகின்ற
கண்ணழகைக் காட்டி - இன்ப
மீட்டுகின்ற
பண்ணழகை யூட்டி
4.
துள்ளிவரும்
காளைமனம் சுற்றுமடி உன்னழகை
அள்ளிவரும்
ஆசைபல கோடி - கண்ணே
ஆடி..வரும்
மாதமினி வாடி
5.
பம்பிறைக்கும்
நீர்வயலைப் பார்த்துமனம் ஏங்குதடி
வம்பிறைக்கும்
உன்செயலை யெண்ணி - நற்றேன்
வாயிறைக்கும்
சீர்க்கணக்குப் பண்ணி
6.
அந்தமலை
இந்தமலை எந்தமலை ஈடாமோ
சந்தமலைப்
பாட்டழகுப் பெண்ணே - மாயத்
தந்திரங்கள்
காட்டுமெழில் கண்ணே
7.
முன்னழகு
பின்னழகு முட்டுதடி எப்பொழுதும்
என்னழகு
என்னழகு ஐயோ - கண்டு
என்றனுயிர் ஆடும்..தையோ தையோ
8.
ஆத்தங்கரைத்
தோப்பருகே ஐஞ்சுகாணி நன்வயலில்
நாத்துநட
வேண்டுமடி இன்று - ஏக்கம்
நாளுமெனைத்
துாண்டுமடி வென்று!
9.
கட்டுக்குழல்
பூமணக்கும்! கம்மாங்கரை தான்மணக்கும்
கட்டழகி
காரிகையுன் வரவு - கண்டு
கண்விழித்துப்
போகுமடி இரவு
10.
தாவணியில்
உன்னழகு தங்கமணிப் பேரழகு
பாவணியில்
நான்புனைந்து தாரேன் - அந்தப்
பட்டுநிலா
இன்றுயிலை வாரேன்
மேலும்
விளக்கம் பெறக் காணொளியைக் காணவும்
Paavalar Payilarangam - [you Tube]
விரும்பிய
பொருளில் இவ்வகைத் தெம்மாங்கில் இரு கண்ணிகள் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர்
கி. பாரதிதாசன்,
கம்பன்
கழகம், பிரான்சு,
தொல்காப்பியர்
கழகம், பிரான்சு.
18.04.2021