வெண்பா மேடை - 213
பொன்மொழி வெண்பா
காலம் பொன்போன்றது! கடமை கண்போன்றது!
காலமே பொன்னாம்! கடமையே ஒண்கண்ணாம்!
ஞாலமே போற்றும் நறுமொழியாம்! - ஆலமே
போன்று மனந்தழைக்கும்! பூத்துப் புகழ்மணக்கும்!
ஊன்று நெறியை உடன்!
தமிழகத்தில் வழங்கிவரும் பொன்மொழி ஒன்றின் கருத்தை எடுத்தோதும் வண்ணம் இவ்வெண்பா அமையும். பொன்மொழி வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
பாலவர் பயிலரங்கம் பிரான்சு
27.09.2021

Aucun commentaire:
Enregistrer un commentaire