வெண்பா மேடை - 203
தலையாகு இயைபு வெண்பா!
மீனாடும் கண்ணழகு, விந்தைமொழி, தேனுாற்று!
மானாடும் துள்ளல், மலர்பார்வை, - தேனுாற்று!
மூத்தாடும் கற்பனை மோகத்தின் தேனுாற்று!
பூத்தாடும் புன்னகை..தே னுாற்று!
மொழிகாக்க வேண்டும் முதன்மை விழிப்பு!
வழிகாக்க வேண்டும் மதியின் - விழிப்பு!
தளைகாக்க வேண்டும் தமிழ்ப்பா விழிப்பு!
விளைகாக்க வேண்டும் விழிப்பு!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நான்கு அடிகளில் ஈற்றுச்சீர் முற்றும் ஒன்றுவது தலையாகு வெண்பா. மேலுள்ள முதல் வெண்பாவில் 'தேனுாற்று' என நான்கு அடிகளிலும் தலையாகு இயைபு பெற்றுள்ளது. 'விழிப்பு' என்ற இயைபை இரண்டாம் வெண்பா பெற்றுள்ளது.
இவ்வாறு அமையும் தலையாகு இயைபு நேரிசை வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். [இவ்வெண்பா இலக்கிய உலகிற்கு என்னுடைய புதிய உருவாக்கம்]
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
18.02.2021

Aucun commentaire:
Enregistrer un commentaire