samedi 18 avril 2015

அழகின் சிாிப்பு


16 commentaires:


  1. அழகின் சிாிப்பாய் அளிக்கின்ற பாக்கள்
    ஒழுகும் மதுவள்ளி ஊட்டும்! - விழுதாகத்
    தாங்கும் தமிழ்ப்பணியைத் தந்து சிறப்பவரே!
    ஓங்கும் புகழால் ஒளிர்!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!

      அருந்தமிழ்ச் செல்வா! அமுதமொழி வாணா!
      பெரும்தமிழ் பெற்ற புலவா! - வருக
      அழகின் சிாிப்பேந்தும் அந்தமிழ் காண!
      பழமாய் இனிக்குமே பாட்டு!

      Supprimer
  2. வணக்கம்
    ஐயா

    புன்னகை செல்வங்களே. பூத்து மலரது.
    நற்றமிழ் பாடி நற்கவி படைப்பாய்
    முத்தமிழ் பணியில் வித்தகம் செய்வாய்.
    பாரில் மாந்தர்கள் போற்றிடும் உன்னை.

    நிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் ஐயா த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      போற்றிப் புகழ்ந்துள்ள பூந்தேன் மொழிபடித்துக்
      காற்றில் பறந்தேன் கமழ்ந்து!

      Supprimer
  3. காலை அழகை கவிஞர் சரோசாவும்
    மாலை அழகை கவிஞர் தணிகாவும்
    சாலை அழகை கவிஞர்தே ராசாவும்
    சோலையைப் பாடும் மலர்.
    மன்றம் மணக்க கவிபாடி சிறக்கட்டும் நாட்கள். வாழ்த்துக்கள் அனைவருக்கும்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      எல்லாத் தலைப்புகளை ஏந்தும் எழில்வெண்பா!
      வல்லோன் அளித்த வரம்!

      Supprimer
  4. நிகழ்வு சிறக்க வாழ்த்துக்கள் ஐயா
    தம +1

    RépondreSupprimer
    Réponses

    1. நெஞ்சம் இனிக்கும்! நிகழ்வு சிறந்தோங்கும்!
      கொஞ்சும் தமிழைக் கொடுத்து!

      Supprimer
  5. பாமாலைகள் இனிதே பவனி வர வாழ்த்துக்கள்
    பாவேந்தரே.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பாவேந்தன் என்று பகன்ற திருமொழி
      பூவேந்தி நல்கும் புகழ்

      Supprimer
  6. வணக்கம்!
    நிகழ்வு சிறக்க என் இனிய வாழ்த்துக்கள் ஐயா !

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இதயத்தின் வாழ்த்துகளை ஈந்துவந்தீர்! நெஞ்சுள்
      புதியதேன் ஊறும் புலர்ந்து!

      Supprimer
  7. சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சிறப்புற வாழ்த்தும் செழும்மனம் கொண்டீர்
      செறிவுறும் இன்பம் செழித்து!

      Supprimer
  8. நிகழ்வு சிறப்புற என் வாழ்த்துக்கள்...!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கனியாய் இனிக்கும் கருத்து! கமழும்
      இனியா அளித்த எழுத்து!

      Supprimer