samedi 14 décembre 2013

பூட்டு வில் வெண்பா




பூட்டு வில் வெண்பா

மொழிசிறக்கப் பாடுபடு! முன்னோர் மொழிந்த
வழிசிறக்கப் பாடுபடு! வண்ண - விழிசிறக்க
மை..தீட்டும் மாதே! மகிழ்ந்திடுவாள் நம்தொண்டில்
தை..தீட்டும் தண்டமிழ்த் தாய்!

அணியிலக்கணம்

வெண்பாவின் ஈற்றுச்சீர், வெண்பாவின் முதல் சீருடன் பொருள்கொள்ளுமாறு அமைந்திருந்தால் 
(தாய் - மொழிசிறக்க) பூட்டு வில் பொருள்கோள் கொண்ட  
பாடல் என்பர்


வில்போல் வளைந்து வெண்பாவின் ஈற்றுச்சீா் 
முதல் சீருடன் பொருள்கொள்ளுமாறு பூட்டுவதால்
இப்பெயா் பெற்றது. 

14.12.2013

11 commentaires:

  1. ஆம் விளங்குகிறது.ஆசிரியரே.
    முதன்முதலாகக் அறிகிறேன்.
    மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    RépondreSupprimer
  2. இதுவரை அறியாத வெண்பா வகை
    தங்கள் அருமையான கவி மூலமும்
    விளக்கத்தின் மூலமும் அறிந்தேன்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    RépondreSupprimer
  3. பூட்டு வில் வெண்பா மிக அருமை!
    இலக்கணம் கண்டதும் மகிழ்வோடு
    எழுதிப் பார்த்தேன் நானும் ஒன்று...

    மூச்சென எங்கள் மொழியோடு மண்ணுமே!
    பேச்சிலும் காண்போம் பெருமையே! - வீச்சென
    வாங்கிடும் வாதங்கள் வேண்டாமே! வீரரொடு
    ஓங்கிடுமே! எங்கள் உயிர்!

    தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள். திருத்தம் காண விரும்புகிறேன்!
    மிக்க நன்றி ஐயா!

    என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும்!

    RépondreSupprimer
  4. அருமை ஐயா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  5. ஓ!.. இது நல்ல ’பூட்டு’ வில் வெண்பாவாக இருக்கிறதே.:)

    கவிஞர்கள் திறனை வளர்க்கும் நல்ல பணி!
    மிக அருமை! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  6. பூட்டு வில் பொருள் கோள் பாடலுக்கான அணியிலக்கணம் தெரிந்து கொண்டேன்.
    நன்றி ஐயா.

    RépondreSupprimer
  7. வில் பூட்டிய வண்டியில் பயணம் செய்த சுகத்தை தந்தது தங்களின் பூட்டு வில் வெண்பா !
    த.ம +1

    RépondreSupprimer
  8. வில் பூட்டிய வண்டியில் பயணம் செய்த சுகத்தை தந்தது தங்களின் பூட்டு வில் வெண்பா !
    த.ம +1

    RépondreSupprimer
  9. பூட்டுவில் பொருள் கோள் அணியிலக்கணத்தை சுட்டியதோடு ஏற்ற வெண்பாவையும்
    இயற்றித் தந்த தங்கள் கவித்திறமை கட்டு மகிழ்ந்தேன்!

    RépondreSupprimer