mardi 19 novembre 2013

விளைத்திடுவோம்





விளைத்திடுவோம்!

ஆண்டவன் அருளைப் பாடிடுவோம்
            அமைதியை நாளும் தேடிடுவோம்
ஈன்றவர் பாதம் நாடிடுவோம்
            இனிமையாய்ப் பழகக் கூடிடுவோம்!

அருள்நெறி தன்னை ஏற்றிடுவோம்
     அன்னையாம் தமிழைப் போற்றிடுவோம்
இருள்வழி வதைவார் காத்திடுவோம்
     இடரினை ஓட்டிக் கூத்திடுவோம்!

அன்பெனும் அமிழ்தை அளித்திடுவோம்
     அறிவெனும் நிழலில் களித்திடுவோம்
பண்பெனும் அழகில் நிலைத்திடுவோம்
     பணிவெனும் விதையை விளைத்திடுவோம்!

10.10.1990

11 commentaires:

  1. அன்பெனும் அமிழ்தை அளித்திடுவோம்
    அறிவெனும் நிழலில் களித்திடுவோம்
    பண்பெனும் அழகில் நிலைத்திடுவோம்
    பணிவெனும் விதையை விளைத்திடுவோம்!

    ஆக்கபூர்வமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    RépondreSupprimer
  2. மிகப் பிடித்தது ஒவ்வொரு வரியும்...நன்றி ஐயா!

    RépondreSupprimer
  3. சிறப்பான கருத்துகள் ஐயா.... வாழ்த்துக்கள்.... நன்றி....

    RépondreSupprimer
  4. விளம்மாகா யென்று விளக்கிய பாக்கள்
    உளமதில் கண்டது ஊற்று!

    மிக அருமை!
    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  5. நற்ப்பண்புகளை உள்ளத்தில் விளைத்துப்போன வரிகள் நன்றிங்க ஐயா.

    RépondreSupprimer
  6. ''..அறிவெனும் நிழலில் களித்திடுவோம்

    பண்பெனும் அழகில் நிலைத்திடுவோம்

    பணிவெனும் விதையை விளைத்திடுவோம்!...''
    அறிவெனும் நிழலில் கழி(ளி)த்தல்
    சிறிதளவும் அலுக்காது. பழிக்காத
    குறியான வாழ்வைக் கொடுக்குமன்றோ!
    தறிக்காது பணி தொடர இதமாய்
    எறிவது அன்பு வாழ்த்து. என்றும்
    பறிக்கட்டும் இறைவன் ஆசியை.
    வேதா. இலங்காதிலகம்.

    RépondreSupprimer
  7. ரசித்துப் படித்து மகிழ்ந்தேன்
    அற்புதமான கவிதை தந்தமைக்கு
    மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  8. தாமதமின்றி விளைத்திடுவோம்!, அழகு தமிழை அள்ளி தெளித்து இனிமையாக கவிதை சமைத்ததனால்.

    எனது வணக்கங்களும் பாராட்டுக்களும்.

    RépondreSupprimer
  9. வணக்கம்
    ஐயா

    சிறப்பான கருத்துக்கூறும் கவிதை அருமை வாழ்த்துக்கள்...ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer