vendredi 17 mai 2013

பூமகள்





பூமகள்

பூமகள் பெயராள் வரும்போது - இங்குப்
பூக்கும் மலரில் மணமேது?
தைமகள் புவியில் வரும்போது - நம்
தமிழர்க் கினிமை வேறேது?

இன்னிசை மீட்டும் இளமாது - அவள்
எழுதும் கவிதைக் கீடேது?
கண்விசை தந்தாள் சுகதூது - அவள்
காதல் பார்வைக்கு இணையேது?

மலர்முகம் கண்டால் மிகசாது - அது
வாட்டும் துயருக்(கு) அளவேது?
நிலவது தேயும் வான்மீது - உன்
நினைவே என்றும் தேயாது!

11.03.1980 

9 commentaires:

  1. ஆம் அய்யா நினைவுகள் ஒருபோதும் தேய்வதில்லை.

    RépondreSupprimer
  2. \\மலர்முகம் கண்டால் மிகசாது - அது
    வாட்டும் துயருக்(கு) அளவேது?\\

    ஒன்றும் தெரியாத பெண்போல் இருந்துகொண்டு எப்படியெல்லாம் படுத்தி எடுக்கிறாள்? அழகுத்தமிழில் எழில்மிகு பாவையைப் பற்றி எடுத்தியம்பிய வரிகளில் சொக்கினேன். பாராட்டுகள் ஐயா.

    RépondreSupprimer
  3. எப்போதோ எழுதியது என்றாலும் ஒப்பேது! இப்போதும் இனிக்கிறது

    RépondreSupprimer
  4. இனிய நினைவுகள்... வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
  5. இன்னிசை மீட்டும் இளமாது - அவள்
    எழுதும் கவிதைக் கீடேது?//உண்மையை தவறென்று ஓதிட முடியாதே?

    RépondreSupprimer
  6. நிலவது தேயும் வான்மீது - உன்
    நினைவே என்றும் தேயாது!

    பூமகள் ஊர்வலம் ..!

    RépondreSupprimer
  7. ஐயா...
    அருமையான பதங்கள்! ரசிக்கின்றேன் ஒவ்வொன்றையும்...

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
    புத்துணர்வு தருதே உம்பாக்கள்
    வித்தை கவிவன்மை சிறப்புடனே
    சொத்தானீர் தமிழ் அணங்கிற்கே!

    த ம 5

    RépondreSupprimer
  8. தேன்சுவை
    சுவைத்து மகிழ்ந்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    RépondreSupprimer