samedi 11 mai 2013

காதல் ஆயிரம் [பகுதி - 89]





காதல் ஆயிரம் [பகுதி - 89]

பதிற்று அந்தாதி [816 இருந்து 825 வரை] 
  
816.
கற்கண்டு காரிகையே! காதல் கமழ்ந்தாட
நற்றொண்டு நாட்டுகிற நாயகியே! - பொற்கொண்டு
செய்த வடிவழகே! செந்தேனை என்மனத்துள்
பெய்த மொழியழகே பேசு!

817.
பேசும் பொழுதெல்லாம் பேரின்பப் பூங்காற்று
வீசும்! விருந்துாட்டும்! விந்தையிடும்! - ஆசுகவி
போன்றே புலமை பொலிந்தாடும்! சொர்க்கத்தை
ஈன்றே அழைக்கும் எனை!

818.
எனையிங்குத் தாலாட்ட என்னவளே வா!வா!
உனையிங்குப் பாடி உயா்வேன்! - சுனையிங்குப்
பூத்து மணக்குதடி! பொன்வண்டு தேனருந்திக்
கூத்து நடத்துதடி கூா்ந்து!

819.
கூா்ந்தெனைப் பார்க்கின்ற கோல விழிகளே!
சோ்ந்தெனை ஏனோ சிதைக்கின்றீா்! - வோ்த்தெனை
வாட்டும் உணா்வுகளைக்  கூட்டும் வகையறிந்தீா்!
தீட்டும் கவிதைகளைத் தின்று!

820.
தின்று சிறக்கும் திருமகளே உன்னழகை!
நின்று கிடக்கும் நினைவேந்தி! - என்று
கிடைக்கும் இளங்கிளியே நல்லருள்! இன்பம்
படைக்கும் கவிக்குயிலே பாடு!

(தொடரும்) 

3 commentaires:

  1. வணக்கம்
    கவிஞர்(ஐயா)

    எனையிங்குத் தாலாட்ட என்னவளே வா!வா!
    உனையிங்குப் பாடி உயா்வேன்! - சுனையிங்குப்
    பூத்து மணக்குதடி! பொன்வண்டு தேனருந்திக்
    கூத்து நடத்துதடி கூா்ந்து!
    மிக அருமையாக உள்ளது விளக்க வார்தைகள் இல்லை தொடர்ந்து படைக்க வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. பேசும் பொழுதெல்லாம் பேரின்பப் பூங்காற்று
    வீசும்! விருந்துாட்டும்! விந்தையிடும்! - ஆசுகவி
    போன்றே புலமை பொலிந்தாடும்! சொர்க்கத்தை
    ஈன்றே அழைக்கும் எனை!

    தேன் மொழியாள் அவள் பேச்சினால் தரும் இன்பம்
    தழைக்கட்டும் இக் கவி போலே வாழ்வில் என்றும் !
    வாழ்த்துக்கள் ஐயா .

    RépondreSupprimer
  3. ரசித்தேன் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer