வேற்றொலி வெண்டுறை
வேற்றொலி வெண்டுறை முன் சில அடிகள் ஓரொசையாகவும்,
ஏனைய அடிகள் வேறோர் ஓசையாகவும் வரும். [முன்னடிகள் பல ஓசையிலும் பின்னடிகள் பல ஓசையிலும்
வருதலும் வேற்றொலி வெண்டுறையாம்]
மூன்றடி வேற்றொலி
வெண்டுறை
கண்ணன் திருவடியைக் கண்டு களித்திடவே
நாளும்
எண்ணம் ஒன்றி இதயம் மலர்ந்திடவே
தண்ணம் பாக்கள் தழைத்துச்
செழித்திடுமே!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
31.08.2025
இது மூன்றடியாய், முன்னடி ஐஞ்சீரும் பின் இரண்டடிகள்
நாற்சீரும் முதலடி சிறப்பில் இயற்சீர் வெண்டளையும் பின் இரண்டடிகள் சிறப்புடைய நேரொன்றாசிரியத்
தளையும் வந்த வேற்றொலி வெண்டுறை.
நான்கடி வேற்றொலி
வெண்டுறை
சற்குருவாம்
அவர்பலரில்
தலைமைபெறு பழனிமலை
தண்ட பாணி
நிற்குநிலை
யுணர்ந்தவன்றன்
எழுத்தாறுஞ் சந்ததமும்
நிகழ்த்த வல்லார்
கற்கு..நா வலர்பெருங் கருணை மாதவர்
விற்குனித்
தமர்செயும்
விறற்கை வீரரே
[அறுவகை இலககணம் மேற்கோள்
பாடல்]
இது நான்கடியாய்,
முன்னுள்ள இரண்டடிகள் அறுசீராய்ப் பின்னுள்ள இரண்டடிகள் நாற்சீராய் முன்னடிகள் சிறப்புடைய
கலித்தளையும் பின்னடிகளில் சிறப்புடைய நிரையொன்றாசிரியத் தளையும் வந்த வேற்றொலி வெண்டுறை.
ஐந்தடி வேற்றொலி
வெண்டுறை
மாலாயுதம் அருள்கொடுக்கும்! முருகன் கொண்ட
வேலாயுதம் பகையுடைக்கும்! வேந்தன் இராமன்
நீலாயுதம் குறியெரிக்கும்! நேயப் புலவர்
கோலாயுதம் புவிபுரட்டும்! கொஞ்சும்
பெண்ணுன்
சேலாயுதம் பேசும் சிரித்து!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
31.08.2025
இது ஐந்தடியாய்,
முன்னுள்ள நான்கடிகள் நாற்சீராய், ஈற்றடி முச்சீராய், நான்கடிகள் சிறப்பில் ஒன்றிய
வஞ்சித்தளையும் ஈற்றடி சிறப்பில் ஒன்றாத வஞ்சித்தளையும் வந்த வேற்றொலி வெண்டுறை.
ஆறடி வேற்றொலி
வெண்டுறை
மூவேந்தர் முன்வாழ்ந்த முத்தமிழே!
மூத்தவளே!
மூவா தென்றும்
நாவேந்தர் நாவினிலே நடம்புரிந்த
நற்றமிழே!
நாளும் வல்ல
பாவேந்தர் பாடிநின்ற பசுங்குயிலே!
பைந்தமிழே!
பரிவோ டுன்னைப்
பூவேந்திப்
புனைகின்றேன்!
புகழேந்தி வந்திடுவாய்!
மாவேந்தி மணந்திடுவாய்! மதுவேந்திச்
சுரந்திடுவாய்!
காவேந்திக்
கமழ்ந்திடுவாய்!
கால்தொட்டுத் தொழுகின்றேன்!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
31.08.2025
இது ஆறடியாய்,
முன்னுள்ள மூன்றடிகள் அறுசீராய்ப், பின்னுள்ள மூன்றடிகள் நாற்சீராய் முதலில் சிறப்புடைய வெண்டளையும் ஈற்றில் சிறப்புடைய
கலித்தளையும் வந்த வேற்றொலி வெண்டுறை.
ஏழடி வேற்றொலி
வெண்டுறை
வளர்ந்தோங்கும்
தென்னைகளும்
வாழைகளும் நிறைந்திருக்கும்!
வாய்க்கால் பாய்ந்தே
உளந்தேங்கும்
இன்பத்தை
ஊரார்க்குத் தான்வழங்கும்!
உண்மை ஒளிரும்!
கழுத்துாரை
யாளும்
கருணைமிகு தாயால்
எழுத்துாரை
யாளும்
எழிற்புலமை மேவும்!
இழுத்துாரை
யாளும்
இவளடிகள் போற்றக்
கொழுத்துரை
யாளும்
கோலமிகு காட்சி!
பழுத்துாரை
யாளும்
பைந்தமிழின் மாட்சி!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
31.08.2025
இது ஏழடியாய், முன்னுள்ள ஈரடிகள் அறுசீராய்ப்,
பின்னுள்ள நான்கடிகள் நாற்சீராய், இரண்டடிகள் சிறப்புடைய வெண்டளையும் நான்கடிகள் சிறப்பில்
வெண்டளையும் வந்த வேற்றொலி வெண்டுறை. விதிவிளக்காய் இரண்டு விகற்பத்தாலும் இப்பாடல்
அமைதலும் உண்டு. [பல விகற்பமும் இரண்டுக்கு மேற்பட்ட ஓசையும் வந்துள்ள வெண்டுறைகள்
நுால்களில் காண்கிறோம். அவை சிறப்பில்லை என்றுணர்வோம்]
ஒத்த நுாற்பாக்கள்
ஐந்தாறு
அடியின் நடந்தவும் அந்தடி
ஒன்றும்
இரண்டும் ஒழிசீர்ப் படுநவும்
வெண்டுறை
நாமம் விதிக்கப் படுமே
[அவிநயனார்]
பெற்றவடி
ஐந்தினும் பிறவினும் பாட்டாய்
இற்ற
அடியும் ஈற்றயல் அடியும்
ஒன்றும்
இரண்டும் நின்ற வதன்சீர்
கண்டன
குறையின் வெண்டுறை யாகும்
[மயேச்சுரர்]
அடிஐந்
தாகியும் மிக்கும் ஈற்றடி
ஒன்றும்
இரண்டும் சீர்தப வரினும்
வெண்டுறை
என்னும் விதியின வாகும்
[காக்கை பாடினியம்]
மூன்றிழிபு
இழிபு ஏழுயர்வாய்
ஆன்றடி
தாம்சில அந்தம் குறைந்திறும் வெண்டுறையே
[யாப்பருங்கல் காரிகை - 28]
மூன்றடி
முதலா ஏழடி காறும்வந்து
ஈற்றடி
சிலசில சீர்குன் றினும்அவை
வேற்றொலி
விரவினும் வெண்டுறை ஆதலும்
[இலக்கண விளக்கம் - 731]
மூன்றிழிவு
ஏழடிபொருந்தி
ஆன்றவந்
தங்குறையின் வெண்டுறை யென்பர்
[வீரசோழியம் - 121]
வெண்டுறை
யன்னவை விரவினும் மூன்றடி
ஆதி
ஏழடி அந்தமாய் ஈற்றிற
சிலவடி
தஞ்சீர் சிலகுறைந் திறுமே
[தொன்னுால் விளக்கம் - 239]
மூன்றடி
முதலாய் ஏழடி காறும்வந்து
ஈற்றடி
சிற்சில சீர்தப நிற்பினும்
வேற்றொலி
விரவினும் வெண்டுறை யாகும்
[முத்து வீரியம்
21]
ஈரடி
பேதித்து இசையும்நா லடிப்பா
வேற்றொலி
யாமென விளம்பினர் சிலரே
[அறுவகையிலக்கணம் - 44]
மூன்றடி முதலாய்
ஏழடி வரையில்
ஈற்றடி அயலடி
சீர்பல குறைந்து
நாற்சீர் அடிமுதல்
எல்வகை அடியினும்
வேற்றொலி ஓரொலி
வருவன வெண்டுறை
[யாப்பு
விளக்கம், புலவர் ப. எழில்வாணன்]
பெருமை ஏழடி
சிறுமை மூவடி
அருமை யாக அளவும்
நெடிலும்
மிக்கும் சீர்பெறும்
மேலா மடிகள்!
தொக்கும் ஈற்றடி
முச்சீர் குன்றா!
முன்னைத் தம்மில்
பின்னைத் தாமே
ஒன்றும் பலவும்
குன்றும் சீர்வரும்!
இன்னரும் ஓரொலி
எல்லா அடிக்கும்
முன்னிரு சீர்கள்
ஒன்றித் தளையுறும்!
மேலே ஓரொலி
கீழே ஓரொலி
ஏல வருதல் கோல
வேற்றொலி!
எல்லாச் சீரும் ஈரேழ்
தளையும்
வல்லமை யேற்று
வாழும் வெண்டுறை!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்] 31.08.2025
பாட்டரசர் கி.
பாரதிதாசன்
31.08.2025
Aucun commentaire:
Enregistrer un commentaire