நேரொன்றாசிரியத் தளையான் வந்த வெண்டாழிசை
கடமை மறவர்
காமராசர்
கல்வி தந்த
காம ராசர்
சொல்லித் தந்த
தொண்டு - வல்ல
நெல்லி யென்றே
நல்கு!
கன்னல் நெஞ்சர்
காம ராசர்
நன்னீர் தந்த
நல்லார்! - அன்பே
என்றும் பாடி
ஏத்து!
கார்வான் வண்ணக்
காம ராசர்
சீர்வான் கண்ட
செல்வர்! - பேர்தான்
பார்வான் ஆளும்
பாடு!
கட்டித் தங்கம்
காம ராசர்
பட்டி தொட்டி
பாடும்! - சிட்டே
கொட்டிக் கும்மி
கூறு!
கண்ணில் உள்ள
காம ராசர்
மண்ணில் தந்த
மாண்பு! - பெண்ணே
எண்ணி யெண்ணி
ஏத்து!
கஞ்சி தந்த
காம ராசர்
நெஞ்சுக் குள்ளே
நின்றார்! - விஞ்சிக்
கொஞ்சும் இன்பக்
கூத்து!
கட்சி தன்னில்
காம ராசர்
வெட்சி மாலை
இட்டார்! - சிட்டே
கட்டித் தந்தார்
காப்பு!
காட்சிக் கின்பர்
காம ராசர்
ஆட்சிக்[கு]
அச்சாய் ஆனார்! - நாட்டின்
மாட்சி அண்ணல்
வாழ்வு!
காக்கும் தெய்வம்
காம ராசர்
பூக்கும் சோலை
போற்றும்! - நோக்கும்
வாக்கும் நல்கும்
வாழ்வு!
கண்ணன் போன்றே
காம ராசர்
எண்ணம் யாவும்
இன்பம்! - மண்ணை
வண்ணம் ஆக்கும்
வாழ்த்து!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
11.08.2025
Aucun commentaire:
Enregistrer un commentaire