ஒரு பொருண்மேல் ஐந்து அடுக்கி
நிரையொன்றாசிரியத் தளையான் வந்த
இன்னிசை வெண்டாழிசை
விடுதலை
வியப்புறு வகைதனில் விடுதலை திருநிலம்
உயிர்ப்புற
உழைத்தவர்! உரிமையை யளித்தவர்!
பயிரென அளித்தனர்
பயன்!
படுகொடு பல..பல!
கொடுநிலை பல..பல!
நடுநிலை துளியிலை!
நசித்திடும் துயர்நிலை!
விடுதலைக் குழைத்தனர்
விழைந்து!
உயிர்தமை அளித்தனர்!
உடைமையை இழந்தனர்!
பயிர்தமைத்
துறந்தனர்! படர்குடி மறந்தனர்!
அயலவர் அகன்றனர்
அறி!
கொலைவெறி பிடித்தவர்
குடிகளை அழித்தனர்!
தலைவெறி வெளிப்படத்
தடைகளை விதித்தனர்!
மலைவெறி விடுதலை
வணங்கு!
கொடியினைத்
சுமந்தனர்! தடியடி யடைந்தனர்!
இடியினை எதிர்த்தனர்!
இரவெலாம் உழைத்தனர்!
விடிவினைப்
படைத்தனர் விழித்து!
பாட்டரசர் கி. பாரதிதா
சன்
தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு
உலகத்
தமிழ்ச் சிறகம்
தொல்காப்பியர்
கழகம், பிரான்சு.
பாவலர்
பயிலரங்கம், பிரான்சு.
15.08.2025
Aucun commentaire:
Enregistrer un commentaire