mercredi 1 avril 2015

மாயப் பெண்ணே!



மாயப் பெண்ணே!


உள்ளத்துள் உலவுகின்ற எழிலே! இன்ப
     உறவாடி நலங்கோடிக் கண்முன் மின்னும்!
பள்ளத்துள் பாய்ந்தோடும் நதியைப் போன்று
     பாவையுன்றன் பார்வையெனை இழுத்தே செல்லும்!
வெள்ளத்துள் அகப்பட்ட பொருளாய் ஆனேன்!
     வேழத்தின் மதமாக ஆசை கொண்டேன்!
மல்லத்துள் கொடிகட்டும் மறவன் வாழ்வை
     மௌனத்துள் ஆழ்த்துவதோ? மாயப் பெண்ணே!

01.04.2015

24 commentaires:

  1. வணக்கம்
    ஐயா
    உள்ளத்தின் நினைவை சீண்டும் கவிகள்
    மனசில் சொல்லெந்தி நிக்குது வரிகள்

    பகிர்வுக்கு நன்றி ஐயா அருமையாக உள்ளது
    என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஜீவநதி இதழ்லே:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சொல்லேந்நி நிற்கும் சுடர்க்கவியை நீ..கற்று
      மல்லேந்தி வாழ்வாய் மகிழ்ந்து!

      Supprimer
  2. மாயப்பெண் கவிதையும் அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அழகான புகைப்படமும் மிக அருமை.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      படமும் படைத்திட்ட பாட்டும் மனத்துள்
      சுடரும் நிலவாய் சுழன்று!

      Supprimer
  3. Réponses

    1. வணக்கம்!

      இனிமை பொழிகின்ற எண்சீர் விருத்தம்!
      கனியைக் கொடுக்கும் கமழ்ந்து!

      Supprimer
  4. Réponses

    1. வணக்கம்!

      அருமை எனமொழிந்தீர்! அந்தமிழ் யாப்பின்
      பெருமை குடித்தீர் பிழிந்து

      Supprimer
  5. வாழ்வை
    மௌனத்துள் ஆழ்த்தும.... மாயப் பெண்.... அருமை.த.ம1

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஞானத்து நன்முனியாய் நல்லவளை நான்எண்ணி
      மௌனத்துள் நிற்பேன் மகிழ்ந்து!

      Supprimer
  6. கள்ளத் தனமறியா காதல் படைப்பிதுவே
    உள்ளக் களிப்பினது ஊற்று.
    அழகான படமும் அதற்கென தொகுத்த வரிகளும் அழகுங்க ஐயா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இன்பக் குறள்பாடி என்னை அசத்துகிறீர்!
      அன்பாம் அமுதை அளித்து!

      Supprimer
  7. மௌன மொழியால் காதல் பேசி
    மௌனத்துள் ஆழ்த்திய மாயப் பெண்
    மனம் ஈருக்கும் அழகுடன் மிளிர்கின்றாள்
    மனதிற்கினிய அழகு தமிழ் மொழியில்!

    கவிஞரே தங்கள் கவிதையை மிகவும் ரசித்தோம்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அழகுத் தமிழில் பழகும் மனத்துள்
      ஒழுகும் அமுதம் ஒளிர்ந்து!

      Supprimer
  8. அருமை அருமை ! கவிஞரே வாழ்த்துக்கள் ...!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அருமை அருமை எனமொழிந்தீர்! அன்பாம்
      பெருஞ்சுவை ஊறும் பெருத்து!


      Supprimer
  9. மாயக்கவி அருமை அய்யா
    தமிழ் மணம் - நவரத்தினம்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மின்னும் மணிகளை எண்ணும் வழிசெய்தீர்!
      என்னுள் பெருகும் இனிப்பு!

      Supprimer

  10. மாயம் புாிகின்ற மங்கையின் பேரழகை
    நேயத் தமிழ்தொடுத்து நெய்தளித்தீர்! - துாய
    கலைச்செல்வி தந்த அருள்என்பேன்! இக்கவிக்கு
    இலைசொல்ல ஈடாய் எழுத்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இலை..சொல்ல என்றே எழுதிய வெண்பாவில்
      கலையெல்லை காட்டிக. களிப்பீந்தீர்! - தலைக்கொள்ளத்
      தந்த சுவையெண்ணித் தாண்டவம் ஆடுகிறேன்!
      இந்தக் கவியை இசைத்து!

      Supprimer
  11. ரசிக்க வைத்த வரிகள்! அருமை! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சுவைத்த அடிகள்! சுடரும் மனத்துக்கு
      அவை..தேன் அடிகள் அருந்து!

      Supprimer
  12. மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

    ஓவம்போல் விளங்குமெழி லுதடா கண்ணின்
    ஒய்யாரப் பார்வைதரும் எழிலா வண்ணத்
    தாவணியின் வீச்சில்வரும் தென்றற் காற்றா
    தள்ளாட வைக்கின்ற அழகா இஃதைப்
    பாவடித்துக் கொடுத்திட்ட கி.பா. தா.வின்
    பாக்கொடுக்கும் இனிமையாஎன் றெதைநான் சொல்ல.?
    பாவடித்த கைகளுக்கும் பாவைக் கும்என்
    பரவசத்தால் கொடுக்கின்றேன் முத்தம் முத்தம்.!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மரபு மாமணி பாவலா் மா. வரதராசன் அவா்களுக்கு வணக்கம்!

      தேனுாற்றிப் படைத்திட்ட புகழ்ப்பா கண்டேன்!
      திகைப்புற்றேன்! இன்புற்றேன்! துள்ளும் வண்ண
      மானாற்றில் குளிப்பதுபோல் என்றன் நெஞ்சம்
      மரபுமணி வரதராசன் எழுத்தில் நீந்தும்!
      கானாற்று நடையாக கவிதை தீட்டும்
      கவிஞர்க்குச் சூட்டுகின்றேன் நன்றி மாலை!
      ஊனேற்றி உயிரேற்றி நட்பு கொண்டேன்!
      உலகமெலாம் உயர்தமிழைப் பரவச் செய்வோம்!

      Supprimer