mercredi 22 avril 2015

கண்ணீர் அஞ்சலி



தமிழ்த்தொண்டர் சு. மதிவாணன் அவர்களுக்கு

கண்ணீர் அஞ்சலி

தேங்கு துயரில் எமையாழ்த்தித்
     தேவன் அடியைச் சேர்ந்ததுமேன்?
ஈங்குன் தொண்டை யார்செய்வார்?
     என்றன் தோழா! மதிவாணா!
தாங்கும் நெஞ்சம் இல்லாமல்
     தவிக்கும் கம்பன் உறவுகளே!
ஏங்கும் பிரான்சு தமிழுலகம்
     என்று மீண்டும் வருவாயோ?

மீளா உலகம் கண்டிடவே
     விரைந்து நீயும் சென்றாயோ?
தோளாய் இருந்து செயற்பட்டாய்!
     தோழா! தூய மதிவாணா!
கேளா திருப்போம் என்றெண்ணிக்
     கிளம்பிப் போனாய்ச் சொல்லாமல்!
தாளாத் துயரில் தவிக்கின்றோம்
     தமிழைச் சுவைக்க வருவாயோ?

பிரான்சுக் கம்பன் கழகத்தின் தொண்டர் சு. மதிவாணன் அவர்கள் 20/04/2015 அன்று இந்தியாவில் இயற்கை எய்தினார்
என்ற செய்தியை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவிக்கின்றோம்
22/04/015  இன்று புதுவையில் இறுதி அஞ்சலி நடைபெறுகிறது
அவரின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற வேண்டுகிறோம்

16 commentaires:

  1. வணக்கம்
    ஐயா
    ஆழ்ந்த இரங்கல்... தெரிவித்து கொள்கிறேன். அவர் மறைந்தாலும் அவரின் தடயங்கள் வாழ்ந்து கொண்டிரும்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. என்றென் றுரைப்பேன் எதுவென் றுரைத்திடுவேன்
      என்றென்றும் தீரா இழப்பு

      Supprimer
  2. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    RépondreSupprimer
    Réponses

    1. எங்கள் மதிவாணன் எங்குப் பறந்தானோ?
      பொங்கும் துயரைப் பொழிந்து!

      Supprimer
  3. Réponses

    1. நல்ல பணிகளை நாளும் புாிந்தவன்
      சொல்லாமல் சென்றதேன் சொல்லு!

      Supprimer
  4. இழப்புகள் துன்பமே பொல்லாக் கவலையும்
    நில்லாது போகும் விரைந்து !

    அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் ......!

    RépondreSupprimer
    Réponses

    1. எல்லாம் அறிந்தவன் இவரை அழைத்தது
      பொல்லாச் செயலாம் புகல்

      Supprimer
  5. Réponses

    1. இருந்த பொழுதெல்லாம் இன்றமிழ்த் தேனை
      அருந்திக் களித்தான் அமர்ந்து

      Supprimer
  6. நல்ல மதிவாணன் நம்மை மறந்ததுமேன்?
    வல்ல மலரடியை நாடியதேன்? - தொல்லுலகில்
    இந்தத் தமிழர் இணைந்திட மாட்டாரோ?
    வெந்து பிரிந்தார் விரைந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. மதிவாணன் இங்கு மறைந்திட்டார் செய்தி
      நதியாகிக் கண்கள் நடுங்கும்! - விதியவன்
      பொல்லாச் செயல்புரிந்து போனானே! இவ்வுலகு
      கொள்ளாத் துயரைக் கொடுத்து!

      Supprimer
  7. விதியென்னும் தீர்ப்பால் விரைந்துசென் றாலும்
    மதிவாணன் வாழ்விங்கு வாழ்வே - பதியோனின்
    பாதமலர் சென்றடைந்து பாங்குடனே வாழ்ந்திருக்க
    மாதவம் செய்தாய் மகிழ்ந்து !

    பிரிந்திட்ட மதிவாணன் ஆன்மா என்றும் இறையடி சேர்ந்திருக்க வேண்டுகிறோம் ஆழ்ந்த அனுதாபங்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. மாதவன் தாளில் மதிவாணன் ஆழ்ந்திட
      வா..தவம் செய்வோம் மனத்து!

      Supprimer
  8. மீளாத் துயரையே மீட்டெடுக்க யாதுரைப்பேன்
    தாளாத் துயரைத் துடை.
    அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.

    RépondreSupprimer
    Réponses

    1. மீளாத் துயரை விளைத்த மதிவாணன்
      தோளாய் இருந்த துணை!

      Supprimer