பாட்டரங்கம்
தலைமை
கவிஞர் கி.
பாரதிதாசன்
தலைப்பு
கவிஞரேறு வாணிதாசனார் பாடல்களில்
புரட்சி - எழுச்சி - மலர்ச்சி - மகிழ்ச்சி
புரட்சி - கவிஞர் தணிகா சமரசம்
எழுச்சி - கவிஞர் சரோசா தேவராசு
மலர்ச்சி - கவிஞர் கோபால கிருட்டினன்
மகிழ்ச்சி - கவிஞர் தேவராசு
புரட்சி
RépondreSupprimerஎழுச்சி
மலர்ச்சி
மகிழ்ச்சியென மன்றம் நிறைந்த மகிழ்வான தருணங்களை பாடல் அடிகளுடன் காண ஆவலாய் இருக்கிறோம். விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
Supprimerவணக்கம்!
மலர்ச்சி மகிழ்ச்சி எழுச்சி புரட்சி
வளர்ச்சி அடையும் வழி
பாட்டரங்கால் பைந்தமிழை பாரெல்லாம் வீசவைக்கும்
RépondreSupprimerநாட்டம் உமதே நலம்பெறட்டும் - ஏட்டில்
இருந்தவற்றை எல்லோர்க்கும் இன்னமுதாய் ஊட்டும்
பெருந்தன்மை என்றும் பெரிது !
தங்கள் தமிழ் பணி தொடரட்டும் கவிஞர் அண்ணா
வாழ்க வளமுடன்
தம +1
Supprimerவணக்கம்!
பாட்டரங்கம்! இனிய பழங்களை ஒன்றாக்கும்
கூட்டரங்கம்! இன்பக் குளிரரங்கம்! - கோட்டைநலம்
ஈட்டரங்கம்! ஈடிலா யாப்பரங்கம்! இன்னமுதை
ஊட்டரங்கம் என்பேன் உணர்ந்து!
வணக்கம்
RépondreSupprimerஐயா
நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதை பதிவுவழி அறிந்தேன் ஐயா. தமிழ்ப்பணி வளர எனது வாழ்த்துக்கள் த.ம7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerவணக்கம்!
புதுவைக் கவியேறு பூத்த மலாின்
மதுவைக் குடித்தோம் மகிழ்ந்து!
RépondreSupprimerபாட்டரங்கம் ஈந்தபுகழ்ப் பாவலனே! பண்டமிழின்
கூட்டரங்கம் உன்றன் குழுவாகும்! - நாட்டரங்கம்
யாவும் உனைப்பார்த்தே ஏக்கமுற இன்றமிழைக்
கூவும் குயிலாய்க் கொடு!
Supprimerவணக்கம்!
என்னுடைய பாட்டரங்கை ஏத்திக் கவிபடித்த
அன்புடைய நெஞ்சின் அழகொளிர்க! - இன்புடைய
வெண்பா விருந்தளிக்கும் விந்தைத் தமிழ்ச்செல்வா!
நண்பா! பெறுவாய் நலம்!
அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
தனபாலன் தந்த தமிழ்படித்தால் மின்னும்
வனமாகப் பூக்கும் மனம்!