விருத்த மேடை - 74
கலிவிருத்தம் - 10
காய் + காய் + மா + தேமா
மட்டுவிரி பொழிற்குன்றம் வலவந் தேறிச்
சட்டவிடா தபுமரவச் சகாயற் போற்றி!
யெட்டுருவாங் குமாரலிங்கத் திறைவன் பாதம்
மட்டுமது மலர்துாவி யஞ்சித் தானால்
[தணிகை புராணம்]
பயிர்காக்கும் வேலியடா! படைக்கும் சோற்றில்
தயிர்காக்கும் குளிர்ச்சியடா! தன்னே ரின்றிச்
செயல்காக்கும் சீர்மையடா! சிவன்போல் என்றும்
உயிர்காக்கும் ஒழுக்கமடா! உணர்வாய் தோழா!
[பாட்டரசர்]
எண்சீர் விருத்தத்தின் அரையடி, கலிவிருத்தத்தின் ஓரடியாக அமைவதுண்டு.
காய் + காய் + மா + தேமா என்ற வாய்பாட்டில் நான்கடிகள் ஓரெதுகையில் அமைய வேண்டும். ஒன்று மூன்றாம்
சீர்களில் மோனை வரும்.
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
27.08.2022
Aucun commentaire:
Enregistrer un commentaire