ஒன்றில் ஒன்று
[கலிவிருத்தம் - வஞ்சி விருத்தம்]
கலிவிருத்தம்
[குறிலீற்று மா + கூவிளம் + கூவிளம் + கூவிளம்]
நல்ல பேரினை நாட்டுவோம் பண்புடனே!
இல்லச் சீரினை ஈட்டுவோம் அன்புடனே!
மெல்ல யாழினை மீட்டுவோம் பண்ணுடனே!
வெல்ல வானினைவேட்டுவோம் இன்புடனே!
வஞ்சி விருத்தம்
[மா + கூவிளம் + கூவிளம்]
நல்ல பேரினை நாட்டுவோம்!
இல்லச் சீரினை ஈட்டுவோம்!
மெல்ல யாழினை மீட்டுவோம்!
வெல்ல வானினை வேட்டுவோம்!
கலிவிருத்தத்தின் அடிதோறும் ஈற்றுச்சீரை நீக்கினால் வஞ்சி விருத்தம் கிடைக்கும். கலிவிருத்தம் 1, 3 ஆம் சீர்கள் மோனை பெறும்.
எளிதாக இந்தப் பாடலை எழுதும் முறை
முதலில் அடிதோறும் பொருள் நிறைவுறும் வஞ்சி விருத்தம் எழுத வேண்டும் [மா + கூவிளம் + கூவிளம்] பின்னே காய்ச்சீரை ஒவ்வோர் அடியின் ஈற்றில் சேர்த்து கலிவிருத்தமாக்க வேண்டும்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
24.07.2022
Aucun commentaire:
Enregistrer un commentaire