mardi 5 juillet 2022

கலிவிருத்தம் - 4

 


விருத்த மேடை - 68

 

கலிவிருத்தம்  - 4

 

குறிலீற்றுமா + கூவிளம் + குறிலீற்றுமா + கூவிளம்


வண்மை இல்லையோர் வறுமை இன்மையால்

திண்மை இல்லைநேர் செறுநர் இன்மையால்

உண்மை இல்லைபொய்  உரையி லாமையால்

வெண்மை இல்லைபல் கேள்வி மேவலால்

[கம்பர், பால்.நாட்டு. - 53]

 

சாதித் தீமையை மோதி நீக்குவோம்!

நீதி மேன்மையை நெஞ்சுள் ஏற்றுவோம்!

ஓதிக் கற்றதை  ஓங்கிச் சாற்றுவோம்!

ஆதி தேவனை ஆழ்ந்து போற்றுவோம்!

[பாட்டரசர்]

 

கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.

குறிலீற்றுமா + கூவிளம் + குறிலீற்றுமா + கூவிளம் என்ற வாய்பாட்டில் விரும்பிய தலைப்பில் கலிவிருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
05.07.2022

Aucun commentaire:

Enregistrer un commentaire