ஒன்றில் ஒன்று [ஏக பங்கி]
[வஞ்சி விருத்தம் - வஞ்சித் துறை]
வஞ்சி விருத்தம்
மா+ மா +காய்
தண்மை தழைக்கும் தகையெழுமே!
வெண்மை விளைக்கும் விதியெழுமே!
திண்மை திளைக்கும் திறனெழுமே!
உண்மை யுளத்தில் ஒளியெழுமே!
வஞ்சித்துறை
தண்மை தழைக்கும்
வெண்மை விளைக்கும்
திண்மை திளைக்கும்
உண்மை யுளத்தில்
வஞ்சி விருத்தின் அடிதோறும் ஈற்றுச்சீரை நீக்கினால் வஞ்சித்துறைக் கிடைக்கும். வஞ்சி விருத்தம் 1, 3 மோனை பெறும். வஞ்சித் துறையை நோக்கி அடிதோறும் முச்சீரும் மோனை பெறுதல் சிறப்பு.
எளிதாக இந்தப் பாடலை எழுதும் முறை
முதலில் அடிதோறும் பொருள் நிறைவுறும் வஞ்சித்துறை எழுத வேண்டும் [மா + புளிமா] பின்னே காய்ச்சீரை ஒவ்வோர் அடியின் ஈற்றில் சேர்த்து வஞ்சி விருத்தமாக்க வேண்டும்.
மேலுள்ள இரண்டு பாடலும் அளைமறி பாப்புப் பொருள்கோளள் பெற்றுள்ளதைப் படித்து மகிழவும்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
23.07.2022
Aucun commentaire:
Enregistrer un commentaire