samedi 16 juillet 2022

ஒன்றுள் ஒன்று

சித்திர கவி மேடை  - 11

[சொற்சித்திரம்]

 

ஒன்றுள் ஒன்று

ஒரு செய்யுளுக்குள் மற்றுமொரு செய்யுள் இருப்பது. கட்டளைக் கலித்துறையில் அடிதோறும் ஈற்றுச் சீரை நீக்கிக் கலிவிருத்தம் வந்துள்ளதைக் காண்க!

 

கட்டளைத் கலித்துறை

 

கொஞ்சுங் கிளியே! குயிலே! மயிலே! குழலிசையே!

விஞ்சும் அழகே! வியக்கும் மலரே! விருந்தமுதே!

நெஞ்சின் கனவே! நிலைத்த நினைவே! நிறைமதியே!

தஞ்சம் அளித்துத் தழுவி மகிழ்வாய் தளிர்கொடியே!

 

கலிவிருத்தம்

[மா +  மா + மா + மா]

 

கொஞ்சுங் கிளியே! குயிலே! மயிலே!

விஞ்சும் அழகே! வியக்கும் மலரே!
நெஞ்சின் கனவே! நிலைத்த நினைவே!

தஞ்சம் அளித்துத் தழுவி மகிழ்வாய்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

15.07.2022

 

Aucun commentaire:

Enregistrer un commentaire