vendredi 22 juillet 2022

விருத்த மேடை - 70

 விருத்த மேடை - 70

 

கலிவிருத்தம்  - 6

[காய் + காய் + காய் + காய்]


[பெரும்பாலுங் காய் முன் நிரையாகிய கலித்தளை வரும். அருகியே வெண்டளை வரும்]

 

கங்கையிரு கரையுடையான்! கணக்கிறந்த நாவாயான்!

உங்கள்குலத் தனிநாதற் குயிர்த்துணைவன்! உயர்தோளான்!

வெங்கரியின் ஏறனையான் விற்பிடித்த வேலையினான்!

கொங்கலரும் நறுந்தண்டார்க் குகனென்னும் குறியுடையான்!

 

[கம்பர், அயோத்தியா. கங்கைகாண் - 25]

 

வில்லுடையான்! விழியிரண்டில் விரிந்தமலர் அழகுடையான்!

மல்லுடையான்! மணக்கின்ற மனமுடையான்! அமுதுடைய

சொல்லுடையான்! அடியார்தம் தொண்டுடையான்! ஒருத்தியெனும்

இல்லுடையான்! இனிப்புடையான்! இராமனெனும் திருமகனாம்!

 

[பாட்டரசர்]

 

கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.

 

காய் + காய் + காய் + காய் என்ற வாய்பாட்டில் அமைந்த கலிவிருத்தம் ஒன்று விரும்பிய பொருளில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
22.07.2022

Aucun commentaire:

Enregistrer un commentaire